புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 20, 2025)

உண்மையுள்ள இருதயத்தோடு ஜெபியுங்கள்

மத்தேயு 6:6

அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.


அந்நாட்களிலே, சிலர், மற்றய மனிதர்கள் காணவேண்டும் என்று தானதர்மங்களை பகிரங்கமாக செய்த வந்தது, மற்றய மனிதர்கள் மத்தியிலே தாங்கள் பக்தியுள்ளவர்கள் என்று காண்பிக்கும் பொருட்டு, குறி த்த நேரத்தில், அவர்கள் வீதிகளிலும், சந்தை வழிகளிலும் இருக்கும் போது, பாயை விரித்து, அந்த இடத்திலே ஜெபம் செய்து வந்தார்கள். ஆனால் அவர்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலே தேவனோடு உறவற்றவர்களாக காணப்பட்டார்கள். அன்று மட்டுமல்ல, இன்றும் கூட, இன்ரநெற் ஊடகங்கள் வழியாக அநேக ஜெபங்களும், பாடல்களும், துதிகள் ஏறெடுக்கப்படுகின்றது. சிலர், தேவனுக்கு ஏற்புடைய ஆராதனையை செய்வதைப் பார்க்கிலும், அதிகபடியாக இரசிகர்களை தங்கள் வீடியோகளுக்கு விருப்பு தெரிவிப்பதையும், இரசிகர்கள் தங்கள் காட்சிகளை அதிகபடியாக பார்க்க வேண்டும் என்பதையே மேன்மைப் படுத்தி வருகின்றார்கள். எடுத்துக்காட்டாக, கிறிஸ்தவ பாடலை பாடும் ஒரு மனிதனின் வீடியோக்கள் ஒரு மில்லியனுக்கு மேலோக, விருப்பு தெரிவிக்கப்பட்டிருந்தால், பெருந்தொகையான பணங்களை செழவழித்து அவர்கள் தங்கள் ஆலங்களுக்கு அழைக்கின்றார்கள். ஆனால், தேவனுக்கு பிரியமான ஒரு ஊழியன், தன் நாளாந்த அலுவல்கள் தேவ சித்த்தின்படி நடத்தி வந்தால், அந்த ஊழியனானவன், கூப்பிடு தொலையில் இருந்தாலும், அவனை பொருட்படுத்துவதில்லை. இப்பபடிப்பட்ட சூழ்நிலைகள் மத்தியிலே, மனிதர்களுடைய இருதயங்களிலுள்ளவைகளை அறிந்து ஆண்டவராகிய இயேசுதாமே, தம்மை பின்பற்றுகின்றவர்களை நோக்கி: 'நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணு. அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.' (மத்தேயு 6:6) என்று கூறினார். அதாவது, ஜெபமானது மனிதர்களுடைய விருப்பு வெறுப்புகளை குறித்ததல்ல, மாறாக, ஒரு விசுவாசியானவன், தன் பிதாவாகிய தேவனோடு உறவு கொள்ளும் பாக்கியமுள்ள வேளையாக இருக்கின்றது. சாமுவேலின் தாயாகிய அன்னாள் தேவ சமுகத்திலே தன் இருயத்தை ஊற்றியது போல நாமும், நம் இருதயத்திலுள்ளவைகளை தேவனிடம் தெரியப்படுத்த வேண்டும்.

ஜெபம்:

பரலோக தேவனே, மனிதர்கள் விரும்ப வேண்டும், பெரும்பான்னையோனோர் என்னை பின்பற்றவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், உண்மையுள்ள மனதோடு உம்மை பின்பற்றி வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 சாமு 1:10-13