புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 17, 2025)

கருத்துள்ள ஜெபம்

ஏசாயா 29:13

இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூர மாய் விலகியிருக்கிறது;


ஊரிலே வாழும் மக்களின் வாழ்விலே துன்பங்கள், துக்கங்கள் ஏற்படும் போது, அந்த ஊரிலே வாழ்ந்த மனிதனொருவன், அவர்களோடு சேர் ந்து தானும் துக்கப்படுகின்றேன் என்பதை காட்டும்படிக்கு, அவர்க ளுக்கு ஆறுதலின் வார்த்தைகளை சொல்லி வந்தான். அவன் பேச்சு வல் லமையுடையவனாக இருந்ததா லும், அவனுடைய குரல்வளம் நன்றாக இரு ந்தாலும், அடுக்கடுக்காக வார்த்தை களை இணைத்து, கவிதை நடை யிலே வசனங்களை தொகுத்து கூறிக் கொள்வான். தானும் அவர்களில் ஒரு வனைப் போல தன்னை காண்பித்து வந்த போதும், அவர் மனதார அந்தக் காரியங்களை செய்வதில்லையென் றும், அருமையான வார்த்தைகளை வெளிவேடமாக கூறிக் கொள்கின்றான் என்று அவன் வீட்டார் நன்றாக அறிந் திருந்தார்கள். ஆனாலும், மக்கள் மனதை கவர்ந்து, அவர்களின் பராட் டுக்களை பெற்றுக் கொள்வது, அவனுக்கு பிரியமாக இருந்தது. மக்கள் அவனை பாராட்டும் போது, அவன் இன்னும் அநேக பாராட்டுகளை பெற்றுக் கொள்ளும்படி இன்னும் அதிகமாக தான் செய்வதை செய்து வந்தான். அந்த மனிதன் மட்டுமல்ல, மற்றவர்கள் தங்களை பாராட் டும்போது, அதைக் குறித்து மனக்குளரிச்சியடையாதவன் யார்? இவ்வ ண்ணமாக ஒருநாள் ஒருவன் தன்னை அறியாமலே சுபாவமாகவே ஒரு நற்கிரியையை செய்து விட்டார். அதை கண்ட அயலவர்கள், அவன் அதை சிறப்பாக செய்தான் என்று அவனை பாராட்டினார்கள். நாட்கள் சென்ற பின்பு, பாராட்டுதலை பெற்றுவிட்டேன், இனி எப்படியாவது சில நற்கிரியைகளை செய்ய வேண்டும் என்று எண்ணம் அவனுக்குள் உண் டாயிற்று. ஒருவேளை இவைகள் உலகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட லாம், ஆனால், அன்றும் இன்றும் சில விசுவாச மார்க்கத்தார், மற்றவ ர்களுடைய பாராட்டுகளை பெறுவதற்கு, நன்றாக ஜெபம் செய்கின்றா ர்கள். தங்கள் குரலை மாற்றி, வார்த்தைகளை நாளாந்த சம்பாஷனை களிலே பயன்படுத்தாத வார்த்தைகளை, அடுக்கடுகாக பேசி மற்றவ ர்களை கவரும்படிக்கு தேவனை நோக்கி ஜெபிக்கின்றார்கள். இருதய ங்ளை ஆராய்ந்தறிகின்ற தேவன் இத்தகைய ஜெபங்களை ஏற்றுக் கொள்வாரோ? பிரியமானவர்களே, நம்முடைய வாயின் வார்த்தை களும் இருதயத்தின் தியானங்களும் தேவனுக்கு பிரியமுள்ளதாக இரு க்கும்படிக்கு, நாம் கருத்தோடு தேவனை நோக்கி ஜெபிக்க வேண்டும்.

ஜெபம்:

என் சிந்தையை அறிந்த தேவனே, நான் உமக்கு முன்பாக முகஸ்தூதி செய்கின்றவனாக காணப்படாதபடிக்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து, தூய ஆவியினால் வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:5-8