புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 15, 2025)

நீங்கள் தர்மம் செய்யும் போது...

மத்தேயு 6:2

ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவதற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன் பாகத் தாரை ஊதுவியாதே;


அக்காலத்திலே, சிலர் தங்களை பக்தியுள்ளவர்கள் என்றும், தேவ பிரமாணங்களின்படி தாங்கள் தானதர்மங்களை செய்கின்ற நீதிமான்கள் என்று காண்பித்து, மனுஷரால் புகழப்படுவதற்கு, தாரை, அதாவது எக்காளத்தை (Trumpet), ஆலயங்களிலும் வீதிகளிலும் ஊதும்படி மனுஷர்களை ஏற்படுத்தினார்கள். அவர்கள் எக்காளத்தை ஊதும் போது, அந்த இடத்திலே தானதர்மங்கள் இன்னாரால் செய்யப்படுகின்றது என்று ஊரார் யாவரும் அறிந்து கொள்வார்கள். 'வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவ னுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்' என்று இவர்களை குறித்து மனிதர்கள் புகழ்ந்து பேசுவார்கள் ஆனால் தேவனானவரோ இவர் களைப் பார்த்து அப்படி கூறுவதி ல்லை. இப்படிப் பட்டவர்களுடைய நிலைமையைக் குறித்து ஆண்டவராகிய இயேசு தாமே கூறும் போது: 'மனுஷர் காணவேண்டுமென்று அவர்களுக்கு முன்பாக உங்கள் தர் மத்தைச் செய்யாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; செய்தால், பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவினிடத்தில் உங்களுக்குப் பலனி ல்லை. ஆகையால் நீ தர்மஞ்செய்யும்போது, மனுஷரால் புகழப்படுவத ற்கு, மாயக்காரர் ஆலயங்களிலும் வீதிகளிலும் செய்வதுபோல, உனக்கு முன்பாகத் தாரை ஊதுவியாதே. அவர்கள் தங்கள் பலனை அடைந்து தீர்ந்ததென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். முதலாவதாக, இவர் கள் தங்களை நீதிமான்கள் என்று எண்ணிக் கொள்ளலாம், ஆனால் உண்மையிலே இவர்கள் மாயக்காரர் என்று பெயர் பெற்றார்கள். இரண்டாவதாக, இப்படியாக செய்யப்பட்ட தானதர்மங்களின் பலனை அவர்கள் அடைந்து விட்டார்கள். இப்படிப்பட்டவர்கள், மனுஷரால் புகழப்படுவதற்காகவே தானதர்மங்களை செய்கின்றார்கள். அவர்கள் மன தின் ஆசையின்படி அவர்கள் அதை அடைந்து கொண்டார்கள். இவர்கள் தங்கள் உதாரத்துவத்தை ஊருக்கு தெரியப் படுத்தும் வேளையிலே, தங்கள் பெயருக்கும் புகழுக்குமாக, தானதர்மங்களை பெறும்படி வரும் வறியோரை ஊருக்கு வெளிப்படுத்தி, ஒருவகையிலே, வெட்கமடையச் செய்து விடுகின்றார்கள். எனவே, ஊரார் உலகத்தாரால் உண்டாகும் புகழை விரும்பாமல், தேவனால் ஏற்றுக் கொள்ளும்படிக்கு நற் கிரியைகளை செய்வோமாக.

ஜெபம்:

அன்பின் பரலோக பிதாவே, நான் மாயக்காரரைப் போல உமக்கு முன்பாக நடந்து கொள்ளாதபடிக்கு, மனத்தாழ்மையும், கீழ்படிவுமள்ள இருதயத்தை தந்து உம்முடைய திவ்விய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 14:31