தியானம் (வைகாசி 14, 2025)
தர்மசகாயத்தில் வளருங்கள்
பிலிப்பியர் 2:4
அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக.
'அல்லாமலும், விசுவாசத்திலும், போதிப்பிலும், அறிவிலும், எல்லாவித ஜாக்கிரதையிலும், எங்கள்மேலுள்ள உங்கள் அன்பிலும், மற்றெல்லாக் காரியங்களிலும், நீங்கள் பெருகியிருக்கிறதுபோல, இந்தத் தர்மகாரியத்திலும் பெருகவேண்டும். இதை நான் கட்டளையாகச் சொல்லாமல், மற்றவர்களுடைய ஜாக்கிரதையைக்கொண்டு, உங்கள் அன்பின் உண்மையைச் சோதிக்கும்பொருட்டே சொல்லுகிறேன். நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபை யை அறிந்திருக்கிறீர்களே; அவர் ஐசுவரியமுள்ளவராயிருந்தும், நீங் கள் அவருடைய தரித்திரத்தினாலே ஐசுவரியவான்களாகும்படிக்கு, உங்கள்நிமித்தம் தரித்திரரானாரே. இதைக்குறித்து என் யோசனையை உங்களுக்கு அறிவிக்கிறேன்; இதைச் செய்கிறதற்கு மாத்திரமல்ல, செய்யவேண்டுமென்று உற்சாகப்படுகிறதற்கும் ஒருவருமாய் ஆரம்பம்ப ண்ணின உங்களுக்கு இது தகுதியாயிருக்கும். ஆகையால் அதை இப்பொழுது செய்து நிறைவேற்றுங்கள்; கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக. ஒருவனுக்கு மனவிருப்பமிரு ந்தால், அவனுக்கு இல்லாததின்படியல்ல, அவனுக்கு உள்ளதின்படியே அங்கிகரிக்கப்படும். மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன். எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம், சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.' (2 கொரி 8:7-15) என்று அப்போஸ்தலராகிய பவுல், தானதர்மங்களை குறித்த விஷயத்திலே, ஒரு விசுவாசியாவனின் மனமும், வாழ்க்கையும், தேவ வசனத்தின்படி எப்படியாக இருக்க வேண்டும் என்று மிகத் தெளிவாக கூறியிருக்கின்றார். இன்று சில விசுவாசிகள், இவைகளை மறந்து, தங்கள் பொருளாதார பெருக்கத்தையும், தங்களுக்குண்டானயிருக்கும் தேவ ஆசீர்வாதத்தையும் மேன்மைபாராட்டி வருகின்றார்கள். 'அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக. கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்க க்கடவது.'
ஜெபம்:
விருப்பத்தையும் செய்கையையும் என்னில் உருவாக்கும் தேவனே, நான் என் அழைப்பின் மேன்மையை மறந்து இந்த உலகத்தின் காரியங்களிலே சிக்கிக் கொள்ளாதபடிக்கு என்னை கரம்பிடித்து வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - லூக்கா 12:15