தியானம் (வைகாசி 13, 2025)
அதிகமாய் கொடுத்தவன் யார்?
2 கொரிந்தியர் 9:7
அவனவன் விசனமாயுமல்ல, கட்டாயமாயுமல்ல, தன் மனதில் நியமித்தபடியே கொடுக்கக்கடவன்; உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்.
ஒரு கிராமதின் மறுமலர்ச்சித் திட்டத்திறன்படி, சிறிய வைத்தியசாலையொன்றை சிறுவும்படிக்கு, அந்த கிராமத்திலே இயங்கி வந்த சன சமூக நிலையத்தினால், நிதி திரட்டும் முயற்சிகள் எடுக்கப்பட்டது. அந்த கிராமதில் குடியிருந்த யாவரும் அந்த திட்டத்தை முன்னெடுத்து செல்லும்படிக்கு, உதவ முன்வந்தார்கள். அவர்களில் அதிகமாக கொடுக்கும் முதல் பத்துபேரின் பெயர்கள், முறைப்படி, அந்த வைத்திய சாலையின் வெளி நோயாளர் மண்டபத்தின் சுவரிலே, எழுதப்படும் என்று அறிவிக் கப்பட்டது. இது ஒரு நல்ல திட்டம், இதன் வழியாக பெயரும் புகழும் உண்டாக்கலாம் என்று தீர்மானித்துக் கொண்ட ஒரு சில முதலாளிகள், வரவிருக்கும் வைத்தியசாலையினால் தங்களுக்கு இலாபம் ஒன்றுமில்லை என்று மனக் குழப்பத்தோடு, மக்கள் என்ன சொல்வார்கள் என்பதினாலே, தங்கள் மதாந்த வருவாயின் ஒரு சதவீதத்தை, நன்கொடையாக கொடுத்தார்கள். வேறு சில வியாபாரிகள், மனமுகந்து தங்கள் மாதாந்த வருவாயில் ஒருசிறிய தொகையை கொடுத்தார்கள். அவர்கள் கொடுத்த நன்கொடைகள் யாவும், இந்த உலகத்தின் பொருளாதார அளவுகோலின்படி மிகப் பெரிதான தொகையாக இருந்தது. அந்தக் கிரமாத்தில், கூலி வேலை செய்து, நாளாந்தம் கடுமையான கஷ்டப்பட்டு உழைக்கும் மனிதனொருவன், தனக்கு கிடைக்கு கொஞ்ச வருவாயில் பாதியை அதாவது 50 வீதத்தை வைத்திய சாலையின் திட்டத்திற்காக வழங்கினான். வைத்தியசாலை திட்டம் முடிவடைந்தது. ஆனால், அந்த எளிமையான வாழ்க்கை வாழும், தாராளமான மனம் படைத்த அந்த மனிதனுடைய பெயர், அதிகமாக கொடுத்தோரின் பெயர் பட்டியலில் இடம்பெறவில்லை. அவனோ, அதைக் குறித்து எந்த கவலையும் இல்லை. ஆனால், தன்னுடைய கிராமத்திற்கு ஒரு வைத்திய சாலை வந்துவிட்டது என்று சந்தோஷப்பட்டான். அருமைய தேவ பிள்ளைகளே, இவர்களிலே யார் அதிகமாக கொடுத்தான் என்று அந்த சனசமூக நிலைய அதிகாரிகரிடத்தில் கேட்டால், அவர்களுடைய பதில் எப்படியாக இருக்கும்? அதே கேள்வியை தேவனாகிய கர்த்தரிடம் கேட்டால் அவருடைய பதில் எப்படியாக இருக்கும்? மனிதனோ வெளியான காரியங்களை பார்க்கின்றான். ஆனாலே, தேவனோ, மனிதனுடைய இருதயங்களில் என்ன இரு க்கின்றது என்பதை ஆராய்ந்தறிகின்றார்.
ஜெபம்:
இருதயங்களை ஆராய்ந்து என் சிந்தைகளை அறிகின்ற தேவனே, என்னுடைய இருதயமானது உமக்கு முன்பாக உண்மையுள்ளதாக இருக்கும்படி பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 112:1-10