தியானம் (வைகாசி 09, 2025)
யாரைக் கனம் பண்ணுகின்றீர்கள்
யாக்கோபு 4:6
ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.
'என் சகோதரரே, மகிமையுள்ள நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின்மேலுள்ள விசுவாசத்தைப் பட்சபாதத்தோடே பற்றிக்கொள்ளாதிருப்பீர்களாக. ஏனெனில், பொன்மோதிரமும் மினுக்குள்ள வஸ்திரமும் தரித்திருக்கிற ஒரு மனுஷனும், கந்தையான வஸ்திரம் தரித்திருக்கிற ஒரு தரித்திரனும் உங்கள் ஆலயத்தில் வரும்போது, மினுக்குள்ள வஸ்திரந்தரித்தவனைக் கண்ணோக்கி: நீர் இந்த நல்ல இடத்தில் உட்காரும் என்றும்; தரித்திர னைப் பார்த்து: நீ அங்கே நில்லு, அல்லது இங்கே என் பாதபடியண்டையிலே உட்காரு என்றும் நீங்கள் சொன்னால், உங்களுக்குள்ளே போதகம்பண்ணி, தகாத சிந்தனைகளோடே நிதானிக்கிறவர்களாயிருப்பீர்களல்லவா?' (யாக்கோபு 2:1-4) என்று பரிசுத்த வேதாகமத்திலே வாசிக்கின்றோம். நம்முடைய தேவன், ஏழையோ, பணக்காரனோ, சமுதாயத்தில் உயர்ந்தவனோ தாழ்ந்தனோ என்ற பட்சபாதம் இல்லாமல் தாழ்மையு ள்ள இருதயமுள்ளவர்களுக்கு கிரு பை அளிக்கின்றவராக இருக்கின்றார். எனவே, ஐசுவரியமுள்ளவர்கள் என்று தேவன் ஜனங்களை புறக்கணிக்கின்றவர் என்று எண்ணிவிடக்கூடாது. மாறாக, நாம் வசதியடன் வாழும் விசுவாசியையும், வறுமைக்கோட்டில் வாழும் விசுவாசியையும் காணும்போது, எப்படியாக அவர்களோடு நடந்து கொள்கின்றோம் என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். அவர் ஒவ்வொருவருடைய இருதயத்திலுள்ளவைகளை அறிந்திருக்கின்றார். எனவே, ஒரு விசவாசியானவன், தனக்கடுதவனை எப்படியாக சிநேகிக்கின்றான் அல்லது கனப்படுத்துகின்றான் என்பதை தானே ஆராய்ந்து அறிந்து கொள்வது அவனுக்கு நல்லது. ஒருவேளை, நாம் முன்பு வாழ்ந்த வழிமுறைமையின்படி, யாவரோடும் எப்படி ஐக்கியமாக இருப்பது எப்படி என்பது ஒரு சவலாக இருக்கலாம். எல்லா சவால்களையும் மேற்கொண்டு, தேவனுக்கு பிரியமில்லாத பழைய பெருமையின் சுபாவங்கள் யாவையும் மாற்றும்படிக்கு தேவ ஆவியானவர் நமக்கு உதவி செய்கின்றவராக இருக்கின்றார். முதலாவதாக, அவர்களோடு எனக்கு சரிவராது, இவர்களோடு எனக்கு ஒத்துப்போகாது என்று விசுவாசிகளை தன் இஷ்டப்படி வகைப்படுத்தாமல், ஒவ்வொருவருமே தங்கள் தங்கள் சுபாவங்கள் மாற வேண்டும் என்ற தீர்மானத்தை எடக்க வேண்டும். அப்போது, தேவ ஆவியானவர் அவனை வழிநடத்திச் செல்வார்.
ஜெபம்:
உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று தள்ளிவிடாமல், தாழ்மை யுள்ளவர்கள் மேல் கிருபையை பொழிகின்ற தேவனே, நானும் உம்மைப் போல மாறும்படிடக்கு, உணர்வுள்ள வாழ்க்கை வாழ என்னை வழிநட த்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சகரியா 7:10