தியானம் (வைகாசி 08, 2025)
மாறாத நற்கனிகள்
எபிரெயர் 13:8
இயேசுகிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்.
சிலர் தனக்கடுத்தவனை சிநேகித்து, புறம்பாயிருக்கும் மற்றவர்களை எண்ணாமல் போகின்றார்கள். இன்னும் சிலரோ, புறம்பாயிருக்கின்ற வர்களுக்கு உதாரத்துவமுள்ளவர்களாயிருந்து, தனக்கடுத்தவனை மறந்து போய் விடுகின்றார்கள். அன்னதானங்களும் தானதர்மங்களும் வீட்டிலே ஆரம்பிக்கபட வேண்டும் என்று பொருள்படும் ஆங்கில பழமொ ழியை அறிந்திருக்கின்றோம். அதாவது, இன்று சில விசுவாசிகள், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் முகமறியாத அந்நியர்களான ஏழை எளியவர்களை விசாரிக்கும்படி, பல ஆயிரக்கணக்காண பண த்தை செலவழித்து, கடல் கடந்து செல்ல ஆயத்தமுள்ளவர்களா யிருகி ன்றார்கள். ஆனால், அவர்கள் கண் முன், வீட்டிலே உள்ள கூடப் பிறந்த சகோதரர்களுக்கும் அல்லது சபை யிலே இருக்கும் கிறிஸ்துவுக்குள் உடன் சகோதரர்களுக்கும் உதவி செய்ய மனதற்றவர்களாக இருக்கின்றார்கள். 'நன்மைசெய்கிறதில் சோர் ந்துபோகாமல் இருப்போமாக. நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம். ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மைசெய்யக்கடவோம்.' (கலாத்தியர் 5:9-10) என்பதை மறந்து விடக்கூடாது. நாம் நம் சொந்தக் குடும்பத்தை விசாரிக்கின்றவர்களாக இருக்க வேண்டும். 'ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்.' (1 தீமோ 5:8). எனவே, தேவனுடைய வார்த்தைகளின் கருப்பொருளை அறிந்து செயற்படுங்கள். கடந்த நாட்களிலே நாம் தியானித்த பிரகாரம், உண்பதற்கு உகந்த சுவையான கனிகளை கொடுக்கும் ஒரு மரமானது, தனது கனிகளை, சகோதரர், அந்நியன், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று மாற்றிக் கொள்வதில்லை. அதே பிரகாரமாகவே, நம்முடைய தேவனும் இருக்கின்றவராகவே இருக்கின்றார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராகவே இருக்கின்றார். அவரைப் போலவே, நாமும், தெய்வீக சுபாவத்திலே மாறாதவர்களாக இருக்க வேண்டும். இவருக்கு அப்படியாக செய்வேன், அவருக்கு இப்படியாக கொடுப்பேன் என்று நேரத்திற்கு நேரம் நம் நற்சுபாவங்களை மாற்றிக் கொள்ளாமல், எப் போதும் தேவனுக்கு எற்ற நற்கனிகளை கொடுக்கின்றவர்களாக நாம் காணப்பட வேண்டும்.
ஜெபம்:
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே, நான் வீட்டிலும் வெளியிலும் உமக்கேற்ற நற்கிரியைகளை பட்சபாதமின்றி செய்யும் படிக்கு உமக்கேற்ற இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - 1 யோவான் 4:20