தியானம் (வைகாசி 06, 2025)
நன்மை செய்வதில் சோர்ந்து போகாதிருங்கள்
ரோமர் 2:7
சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார்.
'உங்கள் சத்துரு பசியாய் இருந்தால் அவனுக்கு போஜனம் கொடு' என்று கூறும் போது, ஒரு மனிதன் உங்களை முழுப்பகையாய் பகை த்து, உங்களுக்கு அநியாயம் செய்யும்படி காத்திருக்கும் போது, நீங் கள் அவனிடம் சென்று, அவனுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது பொருளல்ல. வாதுக்கும், சண் டைக்கும், வன்முறைக்கும் தர் ணம் பார்த்துக் கொண்டிருப்ப வர்களைவிட்டு நாம் நம்மை பாது காத்துக் கொள்ள வேண்டும். உங்கள் சத்துரு பசியாய் இருந் தால் அவனுக்கு போஜனம் கொடு என்பதைக் குறித்த சில காரியங்களை இந்நாளிலே தியானிப்போம். முதலாவதாக, நன்மை செய்யும் படி விசுவாசியொருவனுக்கு ஏற்படும் சந்தர்ப்பங்கள். ஒரு விசுவாசியானவன், ஒவ்வொரு நாளும் தான் படுக்கையால் எழுந்த பின்பு, சத்துருக்களை தேடி, எந்த எதிரிகளுக்கு இன்றைக்கு உதவி செய்வேன் என்று ஊரெல்லாம் சுற்றித் திரிய வேண்டும் என்பது பொரு ளல்ல. அதே நேரத்தில், எதிர்கின்ற வர்களுக்கு உதவி செய்ய ஏற்பட க்கூடிய தகுந்த சந்தர்ப்பங்களை அவன் சாதுரியமாக தவிர்த்துக் கொள்ள முயற்சி செய்யக்கூடாது. கிடைக்கும் ஒவ்வொரு தகுந்த சந்த ர்பங்களிலும் யாவருக்கும் நன்மை செய்ய ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, தேவ பிள்ளைகளுடைய கனிகள் மாறிப்போவதில்லை. சுவையான கனிதரும் மாமரமானது, அதனிடம் கனி களை பறித்து உண்ணும்படி வரும் யாருக்கு அதை தடை செய்யும்? அந்த மரமானது இயற்கையாகவே, தன்னிடம் வரும் சன்மார்க்கன், துன்மார்க்கன், ஏழை, பணக்காரன், வழிப்போக்கன், வீட்டு சொந்தக்கா ரன் யாவருக்கும் தன்னிடமிருக்கும் சுவையான கனியையே கொடுக்கும். அதுபோலவே, தேவ பிள்ளையின் சுபாபமானது காணப்பட வேண்டும். தனக்கு பிரியமானவனுக்கு மட்டும் உதவி செய்வேன். என்னை மதித்து கனம்பண்ணுகின்றவனுக்கு மட்டும் ஆவியின் கனிகளை காண்பிப்பேன். மற்றவர்களுக்கு என் மாம்சத்தின் இச்சைகளை காண்பிப்பேன் என்று ஒரு விசுவாசியானவன் கூறிக் கொள்ள கூடுமோ? ஒரு விசுவாசியான வனின் வாழ்விலே ஆவியின் கனி வெளிப்படாமல் அதை மறைத்து வை த்தால், அது அவனுடை மாம்சத்தின் எண்ணமாக இருக்கும் அல்லவோ. எனவே, எல்லா வேளைகளிலும் நன்மை செய்யவதையே நோக்கமாக கொண்டு, கிடைக்கும் சந்தர்பங்களை ஆதயப்படுத்திக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
எல்லா சூழ்நிலைகளிலும் உமது சாயலிலே வளரும்படி போதி த்து நடத்துகின்ற தேவனே, எனக்கு கிடைக்கும் எல்லா சந்தர்பங்களில் நான் நன்மை செய்யும்படி ஆயத்தமாக இருக்க நீர் எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - கலா 6:9