தியானம் (வைகாசி 05, 2025)
மனஅழுத்தமும் மனக்கசப்பும்
ரோமர் 12:14
உங்களைத் துன்பப்படுத்துகி றவர்களை ஆசீர்வதியுங்கள்; ஆசீர்வதிக்கவேண்டியதேயன்றி சபியாதிருங்கள்.
ஆரம்பம் அற்பமானதாக தோன்றலாம். உங்கள் பிரயாசம் அர்த்தமற்றது போல காணப்படலாம். ஆனால் ஒரு விசுவாசியானவன் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து, அவர் சொன்ன காரியங்களை செய்யும்படி தன்னை ஒப்புக் கொடுக்கும் போது அவன் விசுவாச வாழ்க்கையை வாழ் பவனாக காணப்படுவான். 'உங் களை நிந்திக்கின்றவர்களுக்காக வும் உங்களை துன்பப்படுத்துகிற வர்களுக்காகவும் ஜெபம் பண்ணு ங்கள்' என்ற வார்த்தையின்படி, ஒரு விசுவாசியானவன், நிந்தனை கள், துன்பங்கள் மத்தியிலே நான் ஜெபம் செய்யப் போகின்றேன் என்று தீர்மானம் செய்வது மிகப் பெரி தான முதலாவது படியாக இருக்கின்றது. அவன் அப்படி தீர்மானம் செய்யும் போது, பலவிதமான மாம்சத்தின் உணர்வளைகள் சிந்தை யிலே தோன்றலாம். ஆனால், அவனுக்குள்ளே வாசம் செய்யும் ஆவி யானவர், அவற்றை மேற்கொள்ள அவனுக்கு உதவி செய்வார். அடுத் தபடியாக, அந்த விசுவாசியானவன், தான் தீர்மானித்தபடி ஜெபம் பண்ண ஆரம்பிக்க வேண்டும். பல மணித்தியாலகளாக ஜெபம் செய்ய வேண்டும் என்பது பொருளல்ல. அவன் அடைந்த நிந்தனைகளயும், துன்பங்களையும் குறித்த மனஅழுத்தமும், கசப்பும் மனதிலே உண்டா கும் போது, சத்துருவானவனின் நோக்கம் அவனில் நிறைவேறாத படிக்கு, அவனை நிந்தித்தவர்களையும், துன்பபப்படுத்தினவர்களையும் மனதிலே சபித்துக் கொள்ளாமலும், சாபமான வார்த்தைகளை அறிக் கையிடாமலும், அவர்களை ஆசீர்வதித்து ஜெபிக்க ஆரம்பிக்க வேண் டும். ஒருவேளை, ஆரம்பித்தில் அத்தகைய செயலானது, அர்த்தமற்ற தாக தோன்றலாம். அப்படியாக அவன் அவர்களுக்காக ஜெபம் செய் யும் போது, அவன் தேவனுடைய சித்தத்தை தன் வாழ் விலே நிறை வேற்றுகின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். ஒருவன் தேவனு டைய வார்த்தைக்கு கீழ்படிந்து, அதன்படிக்கு கிரியைகளை நடப்பி க்கும் போது, அவன் தேவனுக்கு பிரியமுள்ளவனாக நடந்து கொள்வ தினாலே, அவன் வாழ்விலே வெற்றியும் ஆசீர்வாதமும் உண்டாகும். தம்மை விசுவசிக்கின்ற ஒவ்வொருவரையும் பரலோகம் சேர்ப்பதும் அவ ர்களுக்கு நித்திய ஜீவனை அருளுவதுமே தேவனாகிய கர்த்தருடைய அநாதி தீர்மாக இருக்கின்றது. வாக்கில் உண்மையு ள்ளவர் அப்படியே நிறைவேற்றி முடிப்பார்.
ஜெபம்:
மனிதனால் செய்து முடிக்க கூடாத நன்மைகளை செய்ய பெலன் தந்து நடத்தும் தேவனே, என்னை காரணமில்லாமல் என்னை நிந்தித்து துன்பப்படுத்துகின்றவர்களுக்காக ஜெபம் செய்ய கற்றுத் தருவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - லூக்கா 6:35