புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 04, 2025)

சமாதானத்தை காத்துக் கொள்ளுங்கள்

யோவான் 14:27

சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னு டைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்;


ஆண்டவராகிய இயேசுதாமே இழந்து போன சமாதானத்தை கொடு கும்படிக்கு இந்த பூவுலகிற்கு வந்தார். ஆனால், சத்துருவாகிய பிசாசானவனோ, ஆதியிலிருந்து இழந்துபோன சமாதானத்தை பெற்றுக் கொள் ளாதபடிக்கும், பெற்றுக் கொண்ட சமாதானத்தை கெடுக்கும்படி சுற்றித் திரிகின்றான். ஒரு விசுவாசியானவன், தான் செய்த குற்றத் தினா லேயோ அல்லது தான் செய்யாத குற்றத்தினாலேயோ, பகை, வன்மம், கசப்பை தன் இருதயத்திலே தங் கும்படி இடம் கொடுக்கும் போது, மனநிம்மதியை இழந்து போகின் றான். நாம் பெற்றுக் கொண்ட சமா தானத்தை காத்துக் கொள்ளும்ப டிக்கு, இடறலை உண்டு பண்ணுகி ன்றவனை குறித்து எச்சரிக்கை யாக இருக்க வேண்டும். சில வேளைகளிலே, விசுவாசிகள் தங்கள் உள்ளத்திலிருக்கும் கசப்பும் பகையும் நியாமானது என்று எண்ணிக் கொள்கின்றார்கள். அது எப்படிப் பட்ட நியாயமாக இருந்தாலும், அந்த விசுவாசிகளின் உள்ளத்திலே கலகமும், குழப்பமும் உருவாகும். அன்றியும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. எனவே, கிறிஸ்தவ வாழ் க்கையிலே எதிர்ப்பு, ஏளனம், சாபமான வார்த்தைகள், சண்டையை கிள ப்பிவிடும் பகைகள் தவிர்க்க முடியாதவைகள். அவைகள் மத்தியிலே விசுவாசியானவன், தான் பெற்றுக் கொண்டு மனச் சமாதானத்தை இழ ந்து போகாமல் காத்துக் கொள்ள வேண்டும். எப்படி? 'நான் உங்க ளுக்குச் சொல்கிறேன், உங்கள் சத்துருக்களை சிநேகியுங்கள்: உங்க ளை சபிப்பவர்களை ஆசீர்வதியுங்கள்: உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்: உங்களை நிந்திக்கின்றவர்களுக்காகவும் உங்க ளை துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம் பண்ணுங்கள்.' என்று சமாதான பிரபுவாகிய ஆண்டவர் இயேசு கூறியிருக்கின்றார். எனவே, 'நீங்கள் ஒன்றுக்குங் கவலைப்படாமல், எல்லாவற்றையுங் குறித்து உங் கள் விண்ணப்பங்களை ஸ்தோத்திரத்தோடே கூடிய ஜெபத்தினாலும் வேண்டுதலினாலும் தேவனுக்குத் தெரியப்படுத்துங்கள். அப்பொழுது, எல்லாப் புத்திக்கும்மேலான தேவ சமாதானம் உங்கள் இருதயங்க ளையும் உங்கள் சிந்தைகளையும் கிறிஸ்து இயேசுவுக்குள்ளாக் காத்துக் கொள்ளும்.' (பிலி 4:6-7). சிறிதான ஆரம்பியுங்கள், தேவ ஆவியான வர்தாமே இவற்றுள் உங்களை பெருகச் செய்வார்.

ஜெபம்:

மனச்சமாதானம் அருளும் தேவனே, இந்த உலகிலே என்னை எதிர்க்கும் சக்திகள் பல இருப்பதினாலே, நான் அவை யாவற்றையும் மேற்கொண்டு, நீர் விரும்பும் வெற்றி வாழ்க்கை வாழ எனக்கு துணை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - கொலோ 3:15