புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 03, 2025)

வேறுபிரிந்த ஜீவியம்

ரோமர் 12:2

நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன் னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.


கோணலும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே குற்றமற்றவர்களும் கப டற்றவர்களும், தேவனுடைய மாசற்ற பிள்ளைகளாகவும், கிறிஸ்துவின் நாளுக்கென்று துப்பரவானவர்களும் இடறலற்றவர்களாகவும் இருக்க வேண்டும் என்று தேவ ஊழியராகிய பவுல் தாமே ஆலோசனை கூறியிருக்கின்றார். நாம் இந்த உலக்திலே வாழ்தாலும், இந்த உலகத்தின் போக்கிற்கு உடன்பட்டவர்கள் அல்ல. அதே வேளையிலே இந்த உலகத் தின் போக்கில் நடந்து, அந்நிய மார்க்கங்களை பின்பற்றுகின்றவர்களை பகைத்து வெறுத்து தள்ளிவிடக் கூடா து. அறியாமையிலும், குருட்டாட்டத்தி லும், பரலோகத்திற்கு பகைஞர்களாகவும் வாழும் அவர்களுக்கு, நம்மிடத்திலே வெளிப்பட்ட மகா பெரிதான தேவ கிருபையானது, வெளிப்பட வேண்டும் என்ற எண்ணமுடையவர்களாக இருக்க வேண்டும். அப்படியானால், அவ ர்களுடைய வழிகளை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டுமோ? அவர்கள் மத்தியிலே அவர்களோடு அவர்களாக, அவர்கள் செய்யும் கிரியைகளை பராமுகமாக இருக்க வேண்டுமோ? இல்லை. துன்மார்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரயாசக்காரர் உட்காரும் இடத்திலெ உட்காராமலும் இருக்கும்படி பரிசுத்த வேதாகமமம் ஆலோசனை கூறுகின்றது. (சங் 1:1). நீதிக்கும் அநீதிக்கும் சம்பந்தமேது? ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்கு பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது (2 கொரி 6:14-16). உலகம் முழுவதையும் இரட்சித்தும் உங்கள் ஆத்துமா கெட்டுப்போனால் அதனால் உங்களுக்கு என்ன பலன்? எனவே பகை வரை நேசிப்பது என்பது, அவர்கள் போக்கிலே செல்வதோ அல்லது அவர்கள் வழிகளை ஏற்றுக் கொண்டு, அவர்களை மனம்நொந்து போகா தபடிக்கு, அவர்கள் அழைக்கும் இடங்களுக்கெல்லாம் செல்வதென்பதோ பொருளல்ல. நம்மீது அன்புகூர்ந்து நமக்காக பலியான கர்த்தர் தாமே, நம்முடைய பாவங்களை நிவர்த்தியாக்கும் கிருபாதார பலியானார். ஆனால், அன்றும், இன்றும், என்றென்றும், அவர் யாதொரு பாவத்திற்கும் பங்கேற்பவரல்லவே. எனவே, நீங்களும் உலகத்தாரின் வழியிலே நடவாமலும், அவர்களை பகைக்காமலும், தேவனுடைய சாட்சியான வாழ்ந்து முன்னேறுங்கள்.

ஜெபம்:

இந்த உலகத்தினாலே கறைபடாமல் வாழும்படி என்னை வேறு பிரித்த பரலோக பிதாவே, எனக்கு வெளிப்பட்ட உம்முடைய மகா மேன்மையான கிருபையானது உம்மை அறியாதவர்கள் வாழ்விலும் வெளிப்படுவதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:27