புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 01, 2025)

நாம் கடனாளிகளை மன்னிப்பது போல...

எபேசியர் 4:32

கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.


கர்த்தராகிய இயேசு கிறிஸ்து கற்பித்து தந்த ஜெபத்திலே, 'எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறது போல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்' என்ற வரிகளை நாம் நன்றாக அறிந்திருக்கின்றோம். அதை பலமுறை அறிக்கை செய்திருக்கின்றோம். இந்த இடத்திலே கர்த்தர்தாமே குறிப்பாக பொருளாதார கடன்களை குறித்து பேசாமல், பொதுவாக நாம் எப்படி யாக இரக்கமுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், மற்றவர்களுடைய தப்பிதங்கள், குற்றங்கள் குறைகளை நாம் மன்னிக்க வேண்டியத்தின் அவசியத்தையும், பிறர் உங்களுக்கு என்ன செய்ய விரும்பு கின்றார்களோ அதையே நீங்கள் அவர்களுக்கு செய்யுங்கள் என்பதையும் குறித்து நமக்கு கற்றுக் கொடுக்கின்றார். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது, காலை வந்தனங்களையும், வாழ்த்துதல்களையும் ஒருவர் மற்றவருக்கு தெரிவிப்பதைப் போல, சிலர், கர்த்தர் கற்பித்த ஜெபத்தை அன்றாடம் கூறிவிட்டு தங்கள் பாட்டிற்கு சென்று விடுகின்றார்கள். இன்னும் சிலர், இரக்கத்தின் மேன்மையும், மன்னிப்பின் மாட்சிமையையும் உணரால், இந்த ஜெபத்தை, ஒருவ்வொரு நாளும், பல தடவைகள் கிளிப்பிள்ளையைப் போல சொல் லிக் கொள்கின்றார்கள். எங்களுடைய பாவங்களை மன்னிக்கப்படும்ப டியாக கடமை உணர்வுடன் மற்றவர்களுடைய குற்றங்களை மன்னித்து விட வேண்டும் என்பது பொருளல்ல. நாம் கர்த்தருடைய சாயலிலே வளரும்படிக்கு, முகங்கோணாமல் இரக்கத்தை காண்பிப்பதில் நாள்தோறும் வளர வேண்டும். ஒரு சமயம், கர்த்தருடைய பிரதான சிஷனாகிய பேதுரு, தன் சகோதரனை எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை மன்னித்தால் போதுமா என்று கேட்டான். அதற்கு கர்த்தர்: ஏழுமுறைய ல்ல, ஏழெழுவது முறை மன்னிக்க வேண்டும் என்று மன்னிப்பதற்கு கணக்கு வைக்க வேண்டாம் என்று பொருளுடன் பதிலளித்தார். இவைகள் பேசுவதற்கும், போதிப்பதற்கும் அருமையாக இருக்கின்றது. ஆனால், ஒரு மனிதனால் இவைகளை எப்படி தன் வாழ்க்கையிலே நடைமுறைப்படுத்த முடியும்? மிகவும் கடினமானது. மனிதனால் கூடாத காரியத்தை செய்து முடிக்கும்படி, தேவன்தாமே, தூய ஆவியானவரின் துணையை நமக்கு தந்து நம்மை பெலப்படுத்தி, வழி நடத்த உண்மையுள்ளவராக இருக்கின்றார். எனவே உங்களை தேவனிடத்தில் ஒப்புக் கொடுங்கள். அவர்தாமே நம்மை நாளுக்குநாள் புதிதாகி அவர் சாயலிலே பெருகச் செய்வார்.

ஜெபம்:

இரக்கத்தில் ஐசுவரியமுள்ள பரலோக தந்தையே, மற்றவர்களு டைய கடன்களை மன்னிப்பது இன்னதென்று உணர்ந்து, மனதார அதை செய்யும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:42-44

Category Tags: