புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 29, 2025)

திட்டமிட்டு வாழும் வாழ்க்கை

மத்தேயு 6:20

பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்;


ஒரு விசுவாசியானவன், இன்னும் பத்து வருடங்களுக்கு பின் நடக்க சாத்தியமான தன்னுடைய மகளுடைய திருமணத்திற்காக பெருந் தொகையான பணத்தை சேகரித்து வைத்தான். திட்டமிட்டு வாழ வேண்டும். ஞானமாக நடந்து கொள்ள வேண்டும். தான் இருந்தாலும் இல்லாவிட்டாலும், தன்னுடைய மனையியோ பிள்ளைகளோ அப்பத்துண்டுக்கு இரங்கித் திரியக்கூடாது என்பது அவ னுடைய ஆதங்கமாக இருந்தது. வேறொருவன், கர்த்தர் வரத் தாமதமா னால், இன்னும் பத்து வருடங்களில், இடம்பெறக்கூடிய தன்னுடைய மகளானவளின் உயர் கல்விக்காக சேர்த்து வைத்த பணத்தின் பெரும் பகு தியை எடுத்து, இன்றைய நாட்களிலே ஏற்பட்டிருக்கும் பொருளாதர நெருக்கடியினால்: உணவு, உடை, உறையுள், அடிப்படைக் ஆரம்பக் கல்வி போன்றவற்றிக்காக தவிக்கும் சில பிள்ளைகளுக்கு உதவி செய்யத் தீர்மானித்தான். எதிர்காலம் கர்த்தருடைய கரத்தில் உண்டு. நான் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளை பார்த்துக் கொள்வார் என்பது அவனுடைய விசுவாசமாக இருந்தது. கிறி ஸ்துவுக்குள் அருமையான சகோதர சகோதரிகளே, ஞானமாய் நடந்து கொள்வதும், திட்டமிட்டு வாழ்வதும், விசுவாசத்திலே உறுதியாயிருப்ப தும் அவனவனுடைய தனிப்பட்ட தீர்மானமாக இருக்கின்றது. ஒரு வேளை நீங்கள் திட்டமிட்டு வாழ்க்கின்ற விசுவாசயாக இருந்தால், எத் தனை ஆண்டுகளுக்கு முன் நீங்கள் திட்டமிட்டு வாழப்போகின்றீர்கள் என்பதை குறித்து சிந்தித்துப் பாருங்கள். உங்கள் சொந்த குடும்பத்தின் சேம நலனுக்காக பல தசாப்பதங்களுக்குரிய தேவைகளை சந்திக்கும் அளவிற்கு சேர்த்து வைத்துவிட்டு, என் ஆத்துமாக களிகூரு என்று கூறிக் கொள்ள கூடுமோ? 'நாளைக்கு நடப்பது உங்களுக்குத் தெரி யாதே. உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக்காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.' (யாக்கோபு 4:14). ஒருவன் தன்னுடைய வாழ்க்கை நிறைவான பின்பு, மற்றவர்களுக்கு உதவி செய்வேன் என்று சொல்லிக் கொள்ளலாம் அல்லது தன்னிடம் தற்போதுள்ளதில் ஒரு பகுதியை பகிர்ந்து கொடுக்கலாம். இது விவாதத்திற்குரியதல்ல, இது அவனவனுடைய தீர்மானம். அவனவன் தன் தன் வாழ்வில் வைத்திருக்கும் அளவுகோல். எனவே, இவைகளைக் குறித்து தியானம் செய்து, மேலான அழியாத பொக்கிஷங்களை உங்களுக்கும் உங்கள் சந்ததிக்கும் சேர்த்து வையுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, என்னுடைய வாழ்வு எப்போதும் உம்மிலே நிலையாக இருக்கும்படிக்கு, நீர் எனக்கு உணர்வுள்ள இருதய த்தையும், பிரகாசமுள்ள மனக்கண்களையும் தந்து வழிநடத்திச் செல் வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:3