தியானம் (சித்திரை 26, 2025)
யாருக்கு உதவி செய்ய வேண்டும்?
கொலோசெயர் 3:16
கிறிஸ்துவின் வசனம் உங்க ளுக்குள்ளே சகல ஞானத் தோடும் பரிபூரணமாக வாச மாயிருப்பதாக;
ஒரு தேசத்தை அரசாண்டு வந்த ராஜாவானவன், தன் ராஜ்யத்திலே ஏழை எளியவர்களுக்கு உவி செய்யும்படி, தன்னுடைய ஸ்தானா திபதிகளில் இருவரை அழைத்து, அவர்களுக்கு குறிப்பிட்ட ரொக்க பணத்தை கொடுத்து, நீதியான முறையிலே, மக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறி, வௌ;வேறு ஊருக்கு அவர்களை அனுப்பி வைத்தார். முதலாவது ஊருக்கு சென்றவன், ராஜாவின் பணத்தை விரயப்படுத்தக்கூடாது, பாத்திரம் அறிந்து பிச்சை கொடுக்க வேண் டும் என்று கூறி, அந்த ஊரிலுள்ள மக்களுடைய நிலைமைகளை ஆராய்ந்தறியும்படி சிலரை நியமி த்தான். அவன் அதிகமாக ஆராய் ந்து அறியும் போது, அவர்களின் தவறுகள் அதிகமாக வெளிப்பட்டது. அவர்களின் தவறுகளாலேயே அவர்கள் கஷ;ப்படுகின்றார்கள் எனவே அவர்களுக்கு உதவி செய்வதில் பிரயோஜனம் இல்லை என்று எண்ணி, தங்களை நாணயமுள்ளவர்கள் என்று காண்பித்த ஒரு சிலருக்கு உதவி செய்து விட்டு, பெருந்தொகையான பணத்தை திரும்ப கொண்டு வந்து ராஜாவிடம் கொடுக்கும்படி கொண்டு வந்தான்;. அவனுடைய மனதிலே, தான் ராஜாவிற்கு அதிக பணத்தை மிச்சம் பிடித்து விட்டேன் என்று எண்ணிக் கொண்டான். மற்றவனோ, இன்னுமொரு ஊருக்கு சென்று, உதவி தேவையோ இல்லையோ என்ற சிந்தனை ஏதும் இல்லாமல் தன் கண் கண்டவர்கள் யாவருக்கும் உதவிகளை செய்து, ராஜாவானாவன் கொடுத்த முழு பணத்தையும் செலவழித்து, தான் ராஜ கட்டளையை, தாராள மனத்துடன், முழுமையான நிறைவேற்றி முடித்தேன் என்று எண்ணிக் கொண்டான். தவறுகள் செய்கின்றவர்களுக்கு எந்தவிதமான இரக்கமும் இல்லை என்றால் இந்தப் பூமியிலே யார் தேவ இரக்கத்தை பெற்றுக் கொள்ளக் கூடும்? தவறுகளை அப்படியே பாராமுகமாகவிட்டு இரக்கத்தை காண்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றால், மனிதர்கள் தங்கள் தவறுகளை எப்படி உணர்ந்து கொள்வார்கள்? பிரியமானவர்களே, செய்கையையும் விரும்பத்தையும் உண்டு பண்ணு கின்ற தேவன்தாமே, அவருடைய சித்தப்படி காரியங்களை செய்வதற்கு வழிநடத்திச் செல்கின்றவராக இருக்கின்றார். எனவே, பல்வேறுபட்ட சூழ்நிலைகளிலே, தேவ சித்தத்தை நிறைவேற்றும்படிக்கு, சுயத்திலே தீர்மானம் எடுத்துக் கொள்ளாமல், தேவ ஞானத்தை நாடுங்கள். அதை பெற்றுக் கொள்ளும்படி தேவ வசனத்திலே நிலைத்திருங்கள்.
ஜெபம்:
இரக்கத்தாலும் நற்கனிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாத மில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிற ஞானத்தை தருகின்ற தேவனே, உம்முடைய சித்தத்தை நான் நிறைவேற்ற தேவ ஞானத்தை தந்து வழிந்த்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - யாக்கோபு 3:17