புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 24, 2025)

உற்சாகத்தோடு நன்மை செய்யுங்கள்

கலாத்தியர் 6:9

நன்மைசெய்கிறதில் சோர்ந்து போகாமல் இருப்போமாக; நாம் தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.


இயற்கை அனர்த்மொன்றினாலே, குறிப்பிட்ட தேசமொன்றின் ஒரு பகுதியிருந்த மக்கள் வெகுவாய் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்படி, புற தேசங்களிலிருந்த நலன் விரு ம்பிகள், கட்டம் கட்டமாக சென்று, பாதிக்கப்பட்ட பகுதியுள்ள மக்களின் வாழ்க்கை வழமைக்கு திரும்ப வேண்டும் என்று சைக்ககள், தையல் இயந்திரங்கள், வள்ளங்களை கொடுத்து உதவினார்கள். அத னால், பலர் நன்மையடைந்தா ர்கள். ஆனால், குறிப்பிட்ட சில ரோ, ஒவ்வொரு குழுக்களும் புறதேசத்திலிருந்து வரும் போது, தங்களுக்கு நன்மை கள் ஏதும் நடக்கவில்லை என்று பாசாங்கு செய்து, தங்களுக்கு கிடைக்கும் சைக்கிள்கள், தையல் இயந்திரங்களை விற்று பணமாக்கிக் கொண்டிருந்தார்கள். உதவி செய்ய வந்த நலன்விரும்பிகள், அவர்களில் ஒரு சிலரை இணங் கண்டு கொள்ளக்கூடியதாக இருந்தது. ஆனாலும், ஒரு சிலரின் துஷ;பிரயோ கங்களினாலே, ஊரில் பாதிக்கப்பட்ட பலருக்கு நன்மைகள் தடைபட க்கூடாது என்று எண்ணத்துடன், சில நஷ;டங்களையும் சகித்துக் கொள்ள ஆயத்தமாக இருந்தார்கள். கிருபையினாலே, விசுவாசத்தை கொண்டு இரட்சிக்கப்பட்ட அருமையான சகோதர சகோதரிகளே, அப்படியான ஈவாக கிடைத்த இரட்சிப்பின் மேன்மையை, சபையிலே இருக்கும் யாவரும் கனப்படுத்துக் கொள்கின்றார்களா? தேவனுடைய கிருபையை அசட்டை செய்யபவர்கள் ஆங்காங்கே இருக்கின்றார்கள் அல்லவா? பிரியமானவர்களே, கோணலும், மாறுபாடான உலகத்திலே வாழ்க்கின் றோம். இந்த உலகத்திலே வாழும் நாங்களும், மற்றவர்களும், இன்னும் சம்பூரணரான நிலையை அடையவில்லை. எனவே, நிலைமையகளை ஆராய்ந்தறிந்து, கூடிய அளவிற்கு விரயங்களை தவிர்த்துக் கொள்வ நல்லது. ஆனால், நீங்கள் முன்னெடுக்கும் எந்த திட்டத்திலும், யாதொரு குறைவோ, துஷ;பிரயோகமோ ஏற்படாது என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். ஒருவன் தான் பசியாய் இருக்கின்றேன் எனக்கு உதவி செய் யுங்கள் என்று கூறினால், அவன் உண்மையுள்ளவனா என்று ஆராய்ந்து அறிவதற்கு பல நாட்களை விரயப்படுத்தி, தாமதம் செய்யாதிருங்கள். நல் மனதோடு உதவியை செய்கின்றவன் அதன் பலனை அடைவான். தீய மனதோடு உதவியை துஷ;பிரயோகம் செய்கின்றவன், தன் கிரியை களுக்கு தக்க பின்விளைவுகளை தனதாக்கிக் கொள்வான். நீங்களோ, நன்மை செய்ய நாடுங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, தீமை மலிந்திருக்கும் இந்த உலகத்திலே, குறைவுகளை கண்டுபிடிக்க வாழ்நாட்களை, விரயப்படுத்தாமல், நன்மை செய்யும் சந்தர்பபங்களை நாடித் தேடும்படிக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:17-18