தியானம் (சித்திரை 23, 2025)
யார் குணமடைய வேண்டும்?
ரோமர் 2:5
அவருடைய தயவு பொறுமை நீடியசாந்தம் இவைகளின் ஐசுவரியத்தை அசட்டைபண்ணுகிறாயோ?
ஒரு ஊரிலே இயங்கி சமூக நலத்திட்டத்தின்படி அந்த ஊரிலே வறுமைக் கோட்டிற்குள் வாழும் பலருக்கு மாதாந்த உதவித்திட்டமாக கூப்பன் அட்டை கொடுக்கப்பட்டு வந்தது. அந்த உதவித்திட்டமானது அந்த ஊரிலிருந்த ஆலமொன்றினால் ஏற்படுத்தப்பட்டு, அந்த ஆலயத்தின் மூப்பரொருவரினால் முன்னெடுகப்பட்டு வந்ததது. அந்த உதவித்திட்டத்தில், உதவி பெறும் குறிப்பிட்ட மனிதனொருவனுகடைய குடும்பமானது அந்த உதவித்திட்டதினால் நன்மை பெற்று வந்தார்கள். ஆனால் அந்த மனிதனுக்கோ புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தது. நாளாந்தம், இரண்டு தடவைகள் அவன் அப்படியாக புகைப்பிடித்துக் கொள்வான். என்பதை அறிந்து கொண்ட அந்த மூப்பரானவர், அவனுக்குரிய உதவித்திட்டத்தை உடடினயாக நிறுத்திவிடும்படியாக தீர்மானம் செய்து கொண்டார். பிள்ளைகள் பட்டினியிருக்கும் போது, அவன் உணர்வடையவான் என்று எண்ணிக் கொண்டார். அன்றிரவு அவர் படுக்கையிலே சாய்ந்திருக்கும் போது, திடீரென, தன்னுடைய கடந்து காலத்தை குறித்து ஞாபகம் அவர் உள்ளத்திலே அவரை உறுத்தியது. பல ஆண்டுகளாக, ஒரு மறைவான, தவறான பழக்கம் அவரை வாட்டிக் கொண்டிருந்தது. அதனால், மறைமுகமாக அவருடைய குடும்பத்திற்கும் இன்றும் சிலருக்கு சில பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது. அந்த ஆண்டுக ளிலேலும், தேவனாகிய கர்த்தர்தாமே அவருடைய பிரயாசங்களை ஆசீர்வதித்து வந்தார். தேவனிடமிருந்து தனக்கு கிடைத்த அந்த இரக்கத்தோடு பார்க்கும் போது, ஊரிலுள்ள அந்த மனிதனானவன் செய்யும் காரியம் அற்பமானது என்று உணர்ந்து கொண்டார். பிரியமான சகோதர சகோதரிகளே, நாம் ஒவ்வொருவரும் எந்த அளவினாலே மற்றவர்களை அளக்கின்றோம் என்பதைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். குற்றங் குறைகளை பாராமுகமாக விட்டுவிட வேண்டும் என்பது பொருளல்ல, ஏற்ற வேளையிலே, தகுந்த வார்த்தைகளினாலே, குறைகளை கண்டித்துணர்த்துவது அவசியமானது. மாறாக ஒரு விசுவாசியானவன், மற்றவர்களுடைய வாழ்விலே சம்பூரண பரிசுத்த த்தை எதிர்பார்க்க முன்பு, தன்னுடைய வாழ்க்கையை தேவ வார்த்தையின் வெளிச்சத்திலே ஆராய்ந்து பார்க்கும் போது, தேவ இரக்கத்தின் பொருளை அறிந்து கொள்ள முடியும். தேவதயவானது நீங்களை குணப்படும்படி உங்களை ஏவுகிறதென்று என்பதை உணர்ந்து அறிந்து செயற்படுங்கள்.
ஜெபம்:
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, உமக்கு விரோதமான இரகமற்ற செயல்களை நடப்பிக்கும்படி நான் ஒருபோதும் எண்ணம் கொள்ளாதபடிக்கு, எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:1-5