தியானம் (சித்திரை 22, 2025)
காரணங்களை தேடுபவர்கள்
மத்தேயு 5:42
உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத் தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த வாழ்ந்து வந்த ஒரு குடும்பத்திலுள்ளவர்கள் பல பொருளாதார நெருக்கடியினால், அவர்களுடைய வாழ்விலே, பல கஷ்டங்களை எதிர்நோக்கி செல்வதை கண்டு கொண்டான். அந்தக் குடும்பத்தின் தகப்பனானவன், வேலை செய்து உழைப்பவனாக இருந்த போதும், குடித்து வெறிப்பதிலும், தனக்கு கிடைத்த பணத்தை பெருக்க வேண்டும் என்று சூதாட்டங்களிலும் தன் உழைப்பின் பெரும்பகுதியை அநியாயமான முறை யிலே செலவு செய்து வந்தான். அதனால் அவனுடைய பிள்ளைகள் சில நேரங்களிலே பட்டினியாகவும், பாடசாலைக்கு வேண்டிய பாடப்புத்தகங்களை குறித்த நேரத்தில் வாங்க முடியாமல் இருந்து வந்தார்கள். அவர்களுக்கு உதவியை செய்தால், அவர்களுடைய தகப்பனானவன், திருந்தமாட்டான். பிள்ளைகள் நன்றாக இருக்கின்றார்கள் என்று கண்டால், அவன் குற்ற உணர்வின்றி தொடர்ந்து அநியாயங்களை செய்து வருவான் என்று கூறி, அந்த ஊரிலுள்ள சிலர், அந்தக் குடும்பத்திற்கு உதவி செய்யாமல் தங்கள் இருதயத்தை கடினப்படுத்டதிக் கொண்டார்கள். அவர்கள் கூறியதில் உண்மை இருந்த போதும், அந்த மனிதனுடைய பிள்ளைகள் இளவயதிலே பல துன்பங்களை எதிர்நோக்கி வந்தார்கள். குடும்ப த்தின் கஷ்டத்தினாலும், சமுதாயத்தின் கடின இருதயத்தினாலும், ஒருவேளை அந்தப் பிள்ளைகள், பணம் சம்பாதிப்பதற்கு தவறாக வழிகளை தெரிந்து கொள்ளக்கூடிய சந்தர்பங்களும் அங்கே காணப்பட்டது. அந்த ஊரிலுள்ள அவர்கள் வீட்டிற்கு அருகே வாழ்ந்து வந்த தாயானவள், தன் வீட்டிலே சமைத்த உணவு பொதிகளைகளையும், பிள்ளைகளுக்கு வேண்டிய அத்தியவசியமான பொருட்களையும் அவ்வப்போது வாங்கிக் கொடுத்து உதவி செய்து வந்தாள். பிரியமான சகோதர சகோதரிகளே, இந்த உலக்கத்திலே அநேக அநீதிகளும், அநியாயங்களும் நடந்து வருவது உண்மை. அதனால், நாம் மற்றவர்களுக்கு உதவி செய்யாமல் இருப்பதற்கு தகுந்த காரணங்களை தேடாமல், அதை நிரூபிப்பதற்காக அதிக நேரங்களை விரயப்படுத்தாமலும், தேவையிலுள்ளவர்களுக்கு இரங்கி உதவுவதற்கு, அந்த தாயானவள் போல நல்ல காரணங்களையும், ஏற்ற வழிமுறைகளையும் தேடுகின்றவர்களாக காணப்பட வேண்டும்.
ஜெபம்:
என் குறைகளை அறிந்தும் எனக்கு இரங்கும் தேவனே, நான் மற்றவர்களுக்கு உதவி செய்யும்படிக்கு நல்ல காரணங்களை தேடும்பனாக இருக்க நீர் எனக்கு உமக்கொத்த இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 2 கொரி 9:7