தியானம் (சித்திரை 21, 2025)
மேலான பொக்கிஷங்கள்
மத்தேயு 5:41
ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
'திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.' என்று நல்மேய்பனாகிய இயேசு கூறியிருகின்றார். திருடன் ஒரு வீட்டிற்குள் கன்னமிட்டு நுழையும் போது, அந்த வீட்டிலிருக்கும் விலையுயர்ந்த பொக்கிஷங்களை திருடிக் கொள்வான். தேவனுடைய வீடாகிய உங்களுக்குள் இருக்கும் விலையுயர்ந்த பொக் கிஷங்கள் என்ன? நித்திய ஜீவனே, நம்முடைய அதிமேன்மையானதும், பிரதானமானதுமாக நம்முடைய வாஞ்சையுமாக இருக்க வேண்டும். இந்த உலகத்திலே வாழும்வரை நம்மிடத்தில் இருக்கும் தெய்வீக சுபாவங்கள் நம்முடைய பரிசுத்த வாழ்வை காத் துக் கொள்வதற்கும், பிதவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்கும் இன்றியமையாதவைகள். எடுத்துக் காட்டாக, ஒருவன் நியாமின்றி உங்களை பகைத்து, உங்கள் நீடிய பொறுமையையும, சாந்த குணத்தையும் குலைத்து, உங்களை கோபப்படுத்தி, பகையை உங்களில் விதைத்து விட்டால், அவன் உங்கள் பொக்கிஷக்களை திருடிக் கொள் கின்றவனாக இருக்கின்றான். அதுமட்டுமல்லாமல், நீங்கள் அழிந்து போகும்படி பகைமையை உங்கள் உள்ளத்தில் பெருக்கப்பண்ணி விடுவான். எனவே, 'ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் கொடு. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.' (மத்தேயு 5:39-41). கருப்பொருளாவது, எதிரியின் இஷ்டம் உங்களில் நிறைவேற இடங் கொடுக்காதிருங்கள். அதாவது, நீங்கள் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்காமல், எதிரியின் தாக்குதல்களுக்கு இன்னும் அதிகமாக இடங் கொடுக்க வேண்டும் என்பது பொருளல்ல. மாறாக, உங்களிடம் ஒப்புக் கொடுக்கப்பட்ட, உன்னதமான மெய்பொ ருளை எதிரியாகிய பிசாசாவன், தன் வஞ்சகத்தினால் திருடிவிடாதபடிக்கு, நீங்கள் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும். நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கின்றீர்கள். உலகத்திற்கு வெளிச்சமாக ஏற்படுத்தப்பட்டிருக்கின்றோம். மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார்.
ஜெபம்:
ஞானமுள்ள இருயத்தை தந்து வழிநடத்தும் தேவனே, எதிரியா கிய பிசாசானவனின் தந்திரமான திட்டங்களுக்கு இடங்கொடுத்த, மேன்மையானவைகளை இழந்து போகாதபடிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 8:36-39