புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 20, 2025)

பிதாவின் சித்தம் நிறைவேறட்டும்

ரோமர் 8:35

உமதுநிமித்தம் எந்நேரமும் கொல்லப்படுகிறோம், அடிக்கப்படும் ஆடுகளைப் போல எண்ணப்படுகிறோம்


தேசாதிபதியாகிய பொந்தியு பிலாத்து, ஆண்டவராகிய இயேசுவை சிலுவையில் அறையும்படி ஒப்புக் கொடுத்த போது, அவனுடைய போர்ச்சேவகர் இயேசுவைத் தேசாதிபதியின் அரமனையிலே கொண்டுபோய், போர்ச்சேவகரின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து, அவர் வஸ்திரங்களைக் கழற்றி, சிவப்பான மேலங்கியை அவருக்கு உடு த்தி, முள்ளுகளால் ஒரு முடியைப் பின்னி, அவர் சிரசின்மேல் வைத்து, அவர் வலதுகையில் ஒரு கோலை க்கொடுத்து, அவர் முன்பாக முழங் காற்படியிட்டு: யூதருடைய ராஜாவே, வாழ்க என்று அவரைப் பரியா சம்பண்ணி, அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைச் சிரசில் அடித்தார்கள். அவரைப் பரியாசம்பண்ணினபின்பு, அவருக்கு உடுத்தின மேலங்கியைக் கழற்றிஇ அவருடைய வஸ்திரங்களை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டு போனார்கள். (மத்தேயு 27: 27-31). அவரோ, தீர்க்கதரிசிகள் தம்மைக் குறித்து முன்னுரைத்தபடி, 'அவர் நெருக்கப் பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை. அடி க்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக் குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்.' (ஏசாயா 53:7). ஏன் இத்தனை பாடுகள்? ஏன் இத் தனை அவமானதும் நிந்தையும்? 'மெய்யாகவே அவர் நம்முடைய பாடுகளை ஏற்றுக் கொண்டு, நம்முடைய துக்கங்களைச் சுமந்தார்; நாமோ, அவர் தேவனால் அடிபட்டு வாதிக்கப்பட்டு, சிறுமைப்பட்டவரென்று எண்ணி னோம். நம்முடைய மீறுதல்களினிமித்தம் அவர் காயப்பட்டு, நம்முடைய அக்கிரமங்களினிமித்தம் அவர் நொறுக்கப்பட்டார்; நமக்குச் சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை அவர்மேல் வந்தது.' (ஏசாயா 53:4-5). புpதாவாகிய தேவனின் அநாதி தீர்மானத்தை நிறைவேற்றி முடிக்கும்படிக்கு, பாவமறியாத பரிசுத்தர், தம்மைத்தாமே பலியாக ஒப்புக் கொடுத்தார். இதுவே நம்மை மீட்க வந்த மெசியாவாகிய இயேசு கிறிஸ்துவின் சாயல். அந்த சாயலிலே நாம் வளரும்படிக்கும், இந்த பூமியிலே நாம் எதையும் இழந்துவிட ஆயத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும். எந்த ஒரு காரியத்திலும் என் இஷ;டபடி அல்லது உலக நீதியின்படி பதி லடி கொடுப்பேன் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு, பிதாவாகிய தேவ னின் சித்தம் உங்களில் நிறைவேற இடங் கொடுங்கள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை வேறு பிரித்த தேவனே, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், எனக்காக பலியான என் மீட்பராகிய இயேசுவை மறந்து என் இஷ்டப்படி செயல்படாதிருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - வெளிப்படுத்தல் 1:6