தியானம் (சித்திரை 19, 2025)
மண்ணுக்குரியவைககள்...
மத்தேயு 5:40
உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள் ள வேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு.
ஒரு கிராமத்திலே வாழ்ந்து வந்த விசுவாசியானவனின், அயலவன், அவர்களுடைய வீட்டிற்கு இடையிலே, அவரவர் நிலங்களை பிரிக்கும் வேலியை அடைக்கும் போது, அறிந்தோ அறியாமலோ, சில மரங்க ங்களை ஒரு விரற்கடையளவு விசுவாசியானவனின் வீட்டின் பக்கமாக நட்டு வேலியை அடைத்துக் கொண்டான். அதை அறிந்த விசுவாசியா னவன், இந்த அநியாயத்திற்கு பதி லடி கொடுக்க வேண்டும் என்று, பொலிசாரிடம் சென்று முயையீடு செய்தான். பின்னர், சில நாட்கள் வேலைக்கு செல்லாமல், பட்டண த்திற்கு சென்று, தன் பணத்தை செலவழித்து, பிரபல்யமான சட்டத் தரணியை கொண்டு, நீதிமன்றத் திலே வழக்கை தாக்குதல் செய் தான். அந்த காரியத்தை செய்து முடிக்கும்வரைக்கும் அவன் ஒயாதி ருந்தான். ஏன் அவன் அப்படி செய்தான்? இந்த பூமையை குறித்து ஆசை அவனை இன்னமும் பற்றிக் கொண்டிருந்தது. பூமிக்குரியவர்கள் அதற்குரிய பொக்கிஷக்களை சேர்த்து வைப்பதற்கு பிரயாசப்படு வார்கள். ஒரு விசுவாசியின் மேலான வாஞ்சையானது எதுவோ, அதை அதை அவன் எல்லாக் காவலோடும் காத்துக் கொள்வன். எதை இழந்து போனாலும், தங்கள் மேலான வாஞ்சையைஇழஅவைகளில் ஒன்றேனை யும் அவர்கள் இழந்து போகாதபடிக்கு காத்துக் கொள்வதற்காக தங் களால் இயன்ற கிரியைகளை நடப்பிப்பார்கள். நாம் பரலோகத்திலே பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டும். 'மண்ணுக்காக மாணிக் கத்தை விட்டிட மாட்டேன்' என்று அருமையான எழுதப்பட்டிருக்கும் பாடல் வரிகளைப் போல, எதை இழந்தாலும் பரலோகத்தை இழந்து போ காதபடிக்கு, பொல்லாங்காக தோன்றுகின்றவைகளையும் நாம் விட்டு விட ஆயத்தமுள்ளர்களாக இருக்க வேண்டும். ஒருவன் உங்கள் பொரு ளொன்றை அநியாயமாக எடுத்துவிட்டால், அதை மறுபடியும் மீள பெற் றுக் கொள்வதற்கு நீங்கள் வழக்காட உங்களுக்கு உரிமையும் அதி கா ரமும் உண்டு. உண்மையான நியாயம் கிடைக்கும் என்பதை ஒருவரும் பூரண நிச்சயத்தோடு கூற முடியாது. அத்தோடு, நீங்கள் வழக்காடும் போது, குற்றம் செய்து, தேவனுடைய பார்வையிலே அநியாயக்கார னாக காணப்படாதபடிக்கு, அழிந்து போகும் உலக காரியங்களை இழ ந்து போவதற்கு ஆயத்தமுள்ளவர்களாக இருங்கள். ஏனெனில் அவை யாவும் ஒருநாள் முற்றாக அழிந்து போகும். விண்ணுக்குரியவர்கள் விண்ணுக்குரியவைகளை காத்துக் கொள்கின்றார்கள்.
ஜெபம்:
பரலோக தேவனே, அழிந்து போகும் இந்த மண்ணுக்குரிய பொக்கிஷங்களை காத்துக் கொள்ளும்படிக்கு, என்னுடைய காலங்களை விரயப்படுத்தாதபடிக்கு, எனக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:20-21