தியானம் (சித்திரை 17, 2025)
தீமையை மேற்கொள்ளும் வழி
யாக்கோபு 4:7
ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்.
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த துஷ்ட மனிதனொருவன், தேவனுக்கு பயந்து அவர் வழியிலே நடக்கும் விசுவாசியொருவன்மேல் எசிரச்சலடைந்தான். அதனால், அவன்மேல் குற்றம் சுமரப்பண்ணும்படிக்கு, அவன் தன் வீட்டில் நடக்கும் களியாட்ட கொண்டாட்டங்களுக்கு வருந்தி அழைத்தான். அந்த விசுவாசியானவனோ, அவை தன்னுடைய வாழ் க்கைமுறைக்கு ஏற்புடையவைகள் அல்ல என்று சாந்தமுள்ள ஆவியோடு பதிலளித்தான். மேற்கொண்டு, எதையும் செய்ய முடியாமல், அந்த துஷ்ட மனிதன், அந்த விசுவாசியின் குடும் பத்தினரை பரியாசம் செய்து வந் தான். எப்படியாவது இந்த விசுவாசி யானவன் தன்னோடு ஒரு சண் டையை ஆரம்பிக்கும்படிக்கு அவன் சதி செய்து வந்தான். விசுவாசி யாவன், துஷ;டனின் எண்ணப்படி, சண்டை முதலிலே ஆரம்பித்து பின்னர், தன்னுடைய வஞ்சகமான கண்ணிக்குள் அவனை மாட்டிவிடும்படி திட்டம் போட்டிருந்தான். அந்த விசுவாசியானவனோ, அதை நன்கு உணர்ந்தவனாக, தன்னுடைய உணர்வுகளுக்கு இடங் கொடுத்து, வஞ்கமான கண்ணிக்குள் அகப்படாதபடிக்கு, தேவனுடைய வார்த் தையானது தன்னிலே நிறைவேறும்படிக்கு இடங் கொடுத்தான். பரிசுத்த வேதாகமகம் கூறுவதின்படி, தேவனுடைய வார்த்தைக்கு அவன் கீழ்படியும்போது, அவன் தேவ சித்தை தன் வாழ்விலே நிறைவேற்று கின்ற வனாக இருக்கின்றான். அப்படி அவன் தேவ சித்ததை தன் வாழ்விலே நிறைவேற்றும்போது, பிசாசானவனின் திட்டத்திற்கு எதிர்த்து நிற்கின்றான். பிசாசானவன் நினைத்தபடி, அவன் பிசாசானவனுக்கு எதிர்த்து நிற்காமல், தேவனுடைய வார்த்தையின்படி, பிசாசானவனுக்கு எதிர்த்து நிற்கின்றான். அதனால், அவன் தீமையை தீமையினால் எதிர்த்து நிற்காமல், பொல்லாங்கனின் தீமையை, பரத்திலிருந்து இறங்கி வரும் நன்மையினால் எதிர்த்து நிற்கின்றான். அவன் அப்படியாக தேவ வார்த்தையின்படி வாழும் போது, எதிராளியானவன், வெட்கமடைந்து, தோல்வியடைந்து, அவனைவிட்டு ஓடிப் போகின்றான். ஒருவேளை தீமை செய்கின்றவன், உங்கள் மாம்சத்திலே தோன்றும் மனித யுக்திகளை எதிர்த்து உங்களை மேற்கொண்டு விடலாம். ஆனால், தேவனுடைய வார்த்தையை எதிர்த்து அதை ஒருபோதும் தேற்கொள்ள முடியாது. எனவே தேவனுக்கு கீழ்படிந்திருங்கள், பிசாசானவனிற்கு எதிர்த்து நில்லுங்கள் அப்போது அவன் உங்களைவிட்டு ஓடிப் போய்விடுவான்.
ஜெபம்:
சகலமும் அறிந்த தேவனே, பிசாசானவனின் தந்திரமான கண்ணிக்குள் நான் அகப்படாதபடிக்கு, உம்முடைய நீதியின் வழியிலே நான் வாழும்படிக்கு எனக்கு பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநட த்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 7:21