புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 15, 2025)

நஷ்ட ஈடா அல்லது விண் கைமாறா?

1 பேதுரு 3:17

தீமைசெய்து பாடநுபவிப்பதிலும், தேவனுக்குச் சித்தமானால், நன்மைசெய்து பாடநுபவிப்பதே மேன்மையாயிருக்கும்.


ஒரு விசுவாசியானவன், இன்னுமொரு விசுவாசியினால் அல்லது வேறொரு மனிதனின் தீமையான செயலினாலே நஷ;டப்பட்டால், அடைந்த நஷ்டத்தை ஈடு செய்து கொள்ள நீதி நியாயங்களை நடப்பிக்க ஏற்ப டுத்தப்பட்டவர்களை நாடுவதற்கும், நஷ;ட ஈட்டை சட்டப்படி பெற்றுக் கொள்ளுவதற்கும் அவனுக்கு உரிமை உண்டு. ஒருவேளை அந்த நஷ;ட ஈடானது இழந்து போனதை மீள பெற்றுக் கொள்ள உதவி செய்ய லாம். ஆனால், பற்பல சமயங்க ளிலே, முன்பிருந்த நிலைமைக்கு திரும்புவது சாத்தியமற்றதாக இரு க்கும். எனினும் நஷ்ட ஈட்டை பெற் றுக் கொள்பவர்கள் தங்கள் மன திலே தற்காலிகமான ஆறுதலை பெற்றுக் கொள்ளலாம். இதைவிட மேலான காரியத்தை நம்மை உருவாக்கினவர், நம்மை முன்குறித்தவர், நம்மை அழைத்தவர், நம்மை தெரிந்து கொண்டவர், நமக்கு நித்திய ஜீவனுக்கு வழியை காண்பிப்பவர், நமக்கு அழியாத விண் கைமாறை அளிக்கின்றவராகிய ஆண்வராகிய இயேசு கூறுகின்றார். திருடனாகிய பிசாசாவனே தீமைக்கு பிதாவாக இருக்கின்றான். எனவே ஒருவன் உனக்கு தீமை செய்யும் போது, நீ தீமையினாலே மறுவுத்தரவு கொடு க்க உனக்கு அதிகாரம் உண்டு. ஆனால், நீ அப்படி செய்யும் போது, நீ திரும்பச் செய்யும் தீமைக்கு பிதா யார்? நீ தீமைக்கு தீமையை செய்ய நாடும் போது யாருடைய திட்டத்திற்குள் நீ இருக்கின்றாய்? நீ தீமைக்கு தீமையை வெற்றிகரமாக செய்து முடித்தபின்பு, உன் எதிராளி நீ செய்த தீமைக்கு இன்னும் அதிக தீமை செய்யாதிருப்பானோ? அந்த தீமையின் நச்சுவட்டம் எங்கே முடிவடையும்? ஆதலால், தேவனின் வல துபாரிசத்திலிருக்கும் மேலானவைகள் தேடும் படியாக பரிசுத்த வேதா கமம் நமக்கு அறிவுரை கூறுகின்றது. தீமையை தீமையினாலே வெல்லு ம்படி முயற்சி செய்து, ஈற்றிலே தோல்வியை உனதாக்கி கொள்ளாமல், உனக்கு இழைக்கப்படும் தீமையை, பிதாவாகிய தேவனிடத்திலிருந்து வரும் நன்மையினால் மேற்கொள்ள பழகிக் கொள். மனித பெலத்திற்கு இது மிகவும் கடினமானது, ஆதலால், பிதாவாகிய தேவன்தாமே, கிறி ஸ்து இயேசுலிலுருந்த தேவ ஆவியை நமக்கு துணையாக கொடுத்திரு க்கின்றார். அவர் வழியாக நாம் தீமைக்கு பதிலாக நன்மை செய்யும் பெலத்தை நாம் பெற்றிருக்கின்றோம். எனவே, உபத்திரவங்கள் மத்தியிலே நம்மை தேற்றி, நல் வழிப்படுத்தும், தேவ ஆவியான வருக்கு இடம் கொடுப்போமாக.

ஜெபம்:

மேலானவைகளை எனக்காக வைத்திருக்கும் தேவனே, மாம்ச த்தின் இச்சைகளை உண்டு பண்ணும் அவயவங்களை களைந்து போட்டு, ஆவிக்குரிய போராயுதங்களை தரித்துக் கொள்ளும்படி எனக்கு உதவி செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:1-4