தியானம் (சித்திரை 14, 2025)
'கண்ணுக்குக் கண்'
மத்தேயு 5:38
கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
மனிதர்களுடைய வாழ்விலே, தங்களுக்கோ, தங்கள் குடும்பத்திற்கோ, தாங்கள் நேசிக்கின்றவர்களுக்னோ தீமைகள் இழைக்கப்படும் போது, மாம்சத்தின் உணர்ச்சிகள் தூண்டப்படுகின்றது. தங்களுக்கு தீமையை இழைத்தவர்கள் துரிதமாகவும், அதிகமாகவும் தங்கள் கண் முன் தண்டிக்கப்பட வேண்டும் என்பதையே பொதுவாக விரும்பிக் கொள்வார்கள். அப்படியாக காலத்திற்கு முன்பதாக செயற்பட்டார்கள், தாங்கள் நினைத்த தண்டனையை மற்றவர்க ளுக்கு செய்து, காலங்கள் கடந்த பின்னர், நான் ஏன் அவசரத்தில் அப்படியாக செய்தேன் என்று மனம் வருந்திக் கொள்வார்கள். சிலரோ, தங்களுக்கு உண்டான சேதம் அற்ப மானதாக இருக்கும் போது, சேத த்தை உண்டு பண்ணினவனின் பொருட்களின்மேல் கண் வைத்து, இலட்சக்கணக்கான பணத்தை நஷ்ட ஈடாக பெற்றுக் கொள்ளும்படிக்கு நீதிமன்றங்களிலே வழக்கை தொடு க்கின்றார்கள். சிலர், நியாயமில்லாமல், ஒருவன் செய்த சிறிய குற்றத் திற்காக அவனை அநேக ஆண்டுகள் சிறையிலே அடைத்து வைக்க முயற்ச்சி செய்கின்றார்கள். எனவே, கண்ணுக்கு கண், பல்லுக்கு பல் என்ற சட்ட பிரமாணமானது பிறப்பிக்கப்பட்டது. அதாவது, ஒருவன் மற்றொருவன் செய்த குற்றத்தை மன்னிக் மனதில்லாமல், அவனை தண்டிக்க விரும்பினால். முதலாவதாக, அவன் நீதி செய்வதை தன் கர ங்களிலே எடுத்துக் கொள்ள கூடாது. மாறாக நியாயம் விசாரிக்கின்ற வர்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும். நியாயம் விசாரிக்கப்படும் போது, ஒவ்வொரு சேதத்திற்கும் ஒரு பெறுமதி உண்டு. அதற்கு அதிகமாக ஒருவனும் தண்டிக்கப்படக் கூடாது. எடுத்துக்காட்டாக, ஒருவன் இன்னுமொருவனுடைய சைக்கிளின் சில்லை சேதப்படுத்தியிருந்தால், சில்லின் பெறுமதியே அவன் கொடுக்க வேண்டிய நஷ்ட ஈடாக இருக்க வேண்டும். அதற்கு மேலாக அவனை தண்டிக்கக்கூடாது என்பதே அதன் கருப்பொருளாக இருந்தது. ஆனால், இன்று மனிதர்கள், தங்களுக்கு தீமை ஏற்பட வேண்டும் என்று பதிவியிருக்கின்றார்கள். தெருவிலே செல்லும் போது, ஒருவனுக்கு தவறுதலாக, சிறிய ஆபத்து நேரிடும் போது, தங்கள் நோவை பன்மடங்காக காண்பித்து, எப்படியாவது, இலட்சக்கணக்கான பணத்தை நஷ்ட ஈடாக பெற்றுக் கொள்ள, ஊரிலுள்ள சிறந்த சட்ட நிபுணர்களை தேடி அலைகின்றார்கள். பிரியமானவர்களே, நீதியுள்ள நியாயாதிப தியாகிய இயேசு கிறிஸ்துவுக்கு முன் உங்கள் இருதயம் நியாயமுள்ளதாக காணப்படுவதாக
ஜெபம்:
நீதியுள்ள நியாயாதிபதியாகிய தேவனே, அநியாயமான பொருட்களை நான் அபகரித்துக் கொள்ளாமலும், அநீதியான ஆதயங்களை விரும்பாமலும், நீதியின் வழியிலே நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ரோமர் 12:17