புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 13, 2025)

தீமையை விலக்குவாயாக

உபாகமம் 19:19

இவ்விதமாய்த் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக.


ஒரு கிராமத்திலே இருந்த வீடொன்றிலே, எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியானது, தவறுதலாக, மேசையில் விழுந்து விட்டதை கண்ட தாயானவள்;, துரிதமான ஓடிச் சென்று, மேசையின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இருந்து தன் சின்ன மகனானவனை தூக்கி அணை த்துக் கொண்டாள். அவனுடைய தகப்பனானவனோ, நெருப்பானது வீட் டை பட்சித்து, தன் குடும்பத்தை ஆபத்திலிருந்து காத்துக் கொள்ளும்படிக்கு வேகமான சென்று மேசையில் பற்றிக் கொண்ட நெருப்பை அணைத்து விட்டார். நம்முடைய தேவனாகிய கர்த்தரும், ஒரு நல்ல தாயைப் போலவும், காக்கும் தந்தையைப் போலவும், தீமையை தம் ஜனத்தின் மத்தியிலிருந்து முற்றாக விலக்கி விடுவதும், தம்முடைய ஜனங்கள் தீமையை பற்றிக் கொள்ளாதபடிக்கு அவர்களை தீமையை விட்டு விலக்கி விடுவதையுமே எப்போதும் நோக்கமாக கொண்டுள்ளார். ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தை யாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒலே சாட்சியினால் நியா ந்தீர்க்கக்கூடாது. இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரி யம் நிலைவரப்பட வேண்டும். ஒருவன்மேல் ஒரு குற்றத்தைச் சுமத்து ம்படி, ஒரு பொய்சாட்சிக்காரன் அவன்மேல் சாட்சிசொல்ல எழும்பி னால், வழக்காடுகிற இருவரும் கர்த்தருடைய சந்நித்தியில் அக்கா லத்தில் இருக்கும் ஆசாரியர்களுக்கும் நியாயாதிபதிகளுக்கும் முன்பாக வந்து நிற்பார்களாக. அப்பொழுது நியாயாதிபதிகள் நன்றாய் விசார ணைசெய்யக்கடவார்கள்: சாட்சி கள்ளச்சாட்சி என்றும், தன் சகோதர ன்மேல் அபாண்டமாய்க் குற்றஞ்சாற்றினான் என்றும் கண்டால், அவன் தன் சகோதரனுக்குச் செய்ய நினைத்தபடியே அவனுக்கு செய்யக்க டவீர்கள். இவ்விதமாய்க் தீமையை உன் நடுவிலிருந்து விலக்குவாயாக. மற்றவர்களும் அதைக் கேட்டுப் பயந்து, இனி உங்களுக்குள்ளே அப்படிப்பட்ட தீமையை செய்யாதிருப்பார்கள் (உபாகமம் 19:16-20). கருப்பொருளாவது, எப்படியாக புற்றுநோய்க் கிரிமியானது, தீவிரமாக ஒருவனுடைய சரீரத்தில் பரவி, அவனை கொன்று போடுகின்றதோ, அதைப்போல தீமையானது பரவி எல்லா ஜனங்களை முற்றிலும் கெடு த்துப்போடாதபடிக்கு, தேவன் காத்துக் கொள்கின்றார். நாமோ, தீமை க்கு பிதாவாகிய பிசாசானவனோடு இணைந்து, தீமையை பரப்பும் நோய்க்கிருமியைப் போல மாறிவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

ஜெபம்:

நன்மைகளின் ஊற்றாகிய தேவனே, நான் தீமைக்கு தீமை செய்து, தீமையின் வித்தை விளையச் செய்கின்றவனாக மாறாதபடிக்கு, ஆபத்து நாட்களிலே உம்மைப் பற்றிக் கொண்டிக்கும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 12:21