தியானம் (சித்திரை 12, 2025)
அழிவிலிருந்து மீட்கும்படிக்கு...
யோவான் 10:10
திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்.
அநியாயங்களுக்கு எதிராக எழுந்து நிற்க யாருமில்லையா? அநீதியை தட்டிக் கேட்க ஒரு தைரியசாலியுமில்லையா? என்று கால தாமதமின்றி உடனடியாக நீதி செய்யப்பட வேண்டும் என்பது பொதுவாக மனி தர்களின் சுபாவமாக இருந்து வருகின்றது. எனக்கு அநீதி செய்தவனை எப்படி தண்டிப்பது? எனக்கு நேரிட்டது போலவே அவனுக்கு இன்னும் அதிகமாக துன்பமும், நஷ;டமும் விளைவிப்பதே மனிதர்களுடைய நீதியாக இருக்கின்றது. என்னு டைய மாட்டின் காலை அடித்து உடைத்த அயலவனுக்கு ஒரு நல்ல பாடம் படிப்பிக்கும்படி, அவனுடைய மாட்டின் இரண்டு கால்களை அடித்து உடைத்து விட வேண்டும் என்று எண்ணிக் கொள்கினறார்கள். இந்த வேதனைக ளின் ஆரம்பம் எங்கே? நம்முடைய முதல் பெற்றோராகிய ஆதாம் ஏவாள், தேவனாகிய கர்த்தருடைய கட்டளையை மீறி, கொல்லவும் அழிக்கவும் வரும் பிசாசானவனின் சத்தத்திற்கு செவி கொடுத்ததால், பழிக்கு பழி வாங்கும் சுபாவம் மனிதர்களிடம் உண்டாயிற்று. மன்னிப்பு என்ற எண்ணத்திற்கு இடமில்லாமல், ஒருவனுக்கு விரோதமாக மற்றவன் எழுந்து, ஒருவரையொருவன் கொன்று அழித்துப் போடும்படிக்கும், அந்த வன்மத்தையும், பகையையும் சந்ததி சந்ததியாக உண்டுபண் ணிவிடுவதும், பிசாசானவனுடைய திட்டடமாக இருந்தது. ஆதியிலிருந்து பழிக்கு பழிவாங்குது மனிதர்களுடைய வாழ்விலே, ஓயாத ஒரு நச்சு வட்டமாகவேஇருந்து வருகின்றது. ஏதோம் என்று அழைக்கப்பட்ட ஏசா வினுடைய சந்ததி, யாக்கோப்பின் சந்ததியின் அழிவை காண்பதையே நோக்கமாக கொண்டிருந்தது. அறிந்தோ அறியாமலே செய்யப்பட்ட குற் றங்களுக்கு முடிவு எங்கே? மனித குலத்தை அழிந்த்துப்போடும் இந்த சதித்திட்டத்தை யாரால் மாற்ற முடியும்? சத்துருவானவன் கொல்லவும் அழிக்கவும் வருகின்றான். நானோ ஜீவனை கொடுக்கும்படி வந்தேன் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். அந்த வாக்குத்தத மானது நிறைவேறும்வரைக்கும், வன்முறைகளையும், பழிவாங்கும் மாம்ச இச்சையை உலகத்திலே, விசேஷமான தம்முடைய ஜனங்கள் மத்தியிலே மட்டுப்படுத்தும்படிக்கு, மோசே என்னும் தம்முடைய ஊழி யர் வழியாக சமூகவியல் நீதித்துறை சார்ந்த சட்ட திட்டங்களை தம்மு டைய ஜனங்களுக்கு கொடுத்தார். அதன் கருப்பொருளை இந்நாட் களிலே தியானம் செய்வோமாக.
ஜெபம்:
நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே, கொல்வதும் அழிப்பதும் என்ற எண்ணம் என்னில் உருவாகாதபடிக்கு, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்
மாலைத் தியானம் - உபாகமம் 19:21