புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 11, 2025)

நம்முடைய வாயின் வார்த்தைகள்

எபேசியர் 5:4

அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள், ஸ்தோத்திரஞ் செய்தலே தகும்.


வேத வார்த்தைகளைக் குறித்த கருப்பொருளை அறியாத சிலர், 'தேவ னுடைய பேரிலாவது, வானத்தின் பேரிலாது, பூமியின் பேரிலாவது, தகாத யோக்கியமற்ற வார்த்தைகளை அல்லது தூஷணமான வார்த்தைகளினாலே ஆணையிட்டுக் கொள்வதே தவறு' என்று எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். பரிசுத்த வாழ்க்கை வாழ வேறு பிரிக்கப்பட்ட சகோதர சகோதரிகளே, நீங்கள் தேவன் தங்குகின்ற ஆலமாக இருக்கின்றீர்கள். தேவனுடைய ஆவி உங் களில் வாசமாயிருக்கின்றார். எனவே தகாத யோக்கியமற்ற வார்த்தைகளும், நெறிகெட்ட தூஷணமான வார்த்தைகளும் எந்தக் காலத்திலும், எந்தப் பருவத்திலும், எந்த சூழ்நிலையிலும் மனிதர்களுக்கு தகாதவைகள். அத்தகைய பேச்சுக்கள் பரிசுத்தவான்களின் வாழ்க்கையிலே சிந்தனையிலும் வரக்கூடாதவைகள். ஒருவன் தன் நாவினாலே, பிதாவாகிய தேவனைத் துதித்துக் கொண்டு, தேவனுடைய சாயலின்படி உண்டாக்கப்பட்ட மனுஷரை அதினாலே சபிப்பவனாக இருப்பதெப்படி? துதித்தலும் சபித்தலும் ஒரே வாயிலிருந்து புறப்படுவதெப்படி? உங்கள் இருதயத்திலே கசப்பான வைராக்கியத்தையும் விரோதத்தையும் வைத்தீர்களானால், நீங்கள் பெருமைபாராட்டாதிருங்கள், சத்தியத்திற்கு விரோதமாய்ப் பொய் கொல்லாமலும் இருங்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. வைராக்கியமும் விரோதமும் எங்கே உண்டடோ, அங்கே கலகமும், சகல துர்ச்செய்கை களுமுண்டு (யாக்கோபு 3:16). எனவே, வைராக்கிமும், விரோதமும் ஒரு விசுவாசியின் இருதயத்தில் இருந்தால், அங்கே கலகங்களுக்கும்ம், வாக்குவாதங்களுக்கும், தகாத வார்த்தைகளுக்கும் இடமுண்டாகும். 'நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகின்றான்: பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக் காட்டுகின்றான். இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்.' எனவே, நம்முடைய வாயிலிருந்து எப்போதும், தேவன் விரும்பும் உண்மையை வெளிப்படும்படிக்கு, நம்முடைய இருதயமானது தேவனுடைய வார்த்தைகளின் தியானத்தினாலே நிறைந்திருக்க வேண்டும். மனிதனுடைய பெலமானது குறைவுள்ளது. மனிதனால் கூடாததை செய்து முடிப்பதற்கு சத்திய ஆவியானவர்தாமே, தகுந்த வேளையில், நமக்கு தேவை யான பெலன் தந்து நடத்திச் செல்ல ஆயத்தமுள்ளவராகவே இருக்கின்றார். (1 கொரிந்தியர் 3:16-17, யாக்கோபு 3:9-14, லூக்கா 6:43-45)

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, என் இருதயமானது எப்போதும் உம் முடைய வார்த்தையாகிய நல்ல பொக்கிஷத்தினால் நிறைந்திருக்கும் படிக்கு, உம்முடைய வார்த்தையை வாஞ்சிக்கும் உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 6:43-45