புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 10, 2025)

பொய் சொல்லாதிருங்கள்

கொலோசெயர் 3:9

ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்;


உன் தேவனாகிய கர்த்தரின் நாமத்தை வீணில் வழங்காதிருப்பாயாக என்று தேவனாகிய கர்த்தர் கூறியிருக்கின்றார். எனவே, சர்வ வல்லமையுள்ள தேவன் பெயரை கூறி, ஒப்பந்தங்களை ஏற்படுத்திவிட்டு, தங்களுடைய பங்கை நிறைவேற்க தவறுவது, தங்கள் வாழ்விற்கு ஆபத்தானது என்று எண்ணிக் கொண்டவர்கள், தங்கள் உண்மையற்ற இருத யத்தினால், தங்கள் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பின்விளைவுகளை தவர்த்துக் கொள்ளும்படிக்கு, தங்கள் ஒப்பந்தங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக, வானத்தையும், பூமியையும், தாயையும், தந்தையையும், புனித ஸ்தலங்களையும் சேர்த்துக் கொள்வது அவர்கள் அறிவிற்கு ஏற்புடையதாக இருந்தது. அதாவது, தேவனுடைய நாமத்தை கூறாமல், வேறெந்த நாமத்தையும் கூறி பொய்களை பிணைத்துக் கொண்டாலும், அது பெரிதான பிரச்சனையில்லை என்று எண்ணிக் கொண்டார்கள். அதனால், மனிதர்கள் பற்பல நாம ங்களை கூறி, சத்தியம் செய்து கொள்ள ஆரம்பித்தார்கள். இன்று சிலர், தங்கள் பெலவீனங்களை அறிந்திருந்தும், தேவனுடைய நீடிய பொறுமையை அசட்டை செய்து, பரிசுத்த ஆவியானவர் பெயரில் துணி கரமாக சத்தியம் செய்து கொள்வதை காண்கின்றோம். 'நான் உங்க ளுக்கு சொல்லுகிறேன் பரிச்சேதம் சத்தியம் பண்ண வேண்டாம். வானத்தின் பேரில் சத்தியம்பண்ண வேண்டாம், அது தேவனுடைய சிங்கா சனம், பூமியின் பேரில் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி, எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ண வேண்டாம் அது மகா ராஜாவின் நகரம். உன் சிரசின் பேரிலும் சத்தியம்பண்ண வேண்டாம், அதின் மயிரையாவது வெண்மையாக்கவும் கறுப்பாக்கவும் உன்னால் கூடாதே' என்று ஆண்டவராகிய இயேசு காரியத்தின் கருப்பொருளை விளக்கிக் கூறியிருக்கின்றார். அதாவது, உங்கள் 'ஆம்;' ஆம் என்றும், 'இல்லை' இல்லை என்றும் இருப்பதாக. நீங்கள் உண்மையைக் கூறும் போது, மற்றவர்கள் உங்களை நம்ப மறுத்தால், அது உங்களுக்கு குற்றமாக இருக்காது. அப்படியாக நீங்கள் உண்மை, மனதார பேசும் போது, நாளடைவிலே மற்றவர்கள் இவன் கூறினால் உண்மையா கத்தான் இருக்கும் என்று உங்களைக் குறித்து சாட்சியிடுவார்கள் அல்லவா? பிரியமானவர்களே சகோதர சகோதரிகளே, வேத வாக்கி யங்களின் கருப்பொருளை உணர்;ந்து கொண்டு, அதன்படி கிரியை களை நடப்பியுங்கள். தூய ஆவியானவர்தாமே உங்களுக்கு துணை செய்வார். (நீதி; 12:17, எபே 4:15, யோவான் 8:45, 16:13)

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, என்னுடைய சுயஎண்ணங்களை நிறைவேற்ற உம்முடைய வார்த்தைகளை அற்பமாக எண்ணி கண்ணிகளிலே சிக்கிவிடாதபடிக்கு என்னை காத்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 6:19