புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 09, 2025)

பொய்யாணையிட வேண்டாம்

லேவியராகமம் 19:12

என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காம லும் இருப்பீர்களாக நான் கர்த்தர்.


தேவனாகிய கர்த்தர் என்றும் மாறாதவர் என்பதை கடந்த நாட்களிலே தியானம் செய்தோம். அதாவது, தேவனாகிய கர்த்தர் தாமே பழைய ஏற்பாட்டிலும் வேறு விதமாக சிந்தித்தார், புதிய ஏற்பாட்டிலே வேறு விதமாக செயல்படுகின்றார் என்று சிலர் தங்கள் அறியாமையினாலே தப்பான எண்ணங் கொண்டிருக்கின்றார்கள். குறித்த காலத்திலே, மோசே வழியாக நியாயப்பிரமாணத்தை கொடுத்த போது, கர்த்தர் தாமே, பொருத்தனைளையும், ஆணை களையும் குறித்து கூறும் போது, 'ஒரு வன் யாதொரு பொருத்தனை பண்ணி னாலும், அல்லது யாதொரு காரியத் தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக் குட்படுத் திக் கொண்டாலும் அவன் சொல் தவ றாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியயெல்லாம் செய்யக் கட வன்' என்று கூறினார். (எண்ணாகமம் 30:2) என்ற பிரமாணமானது, தம்மு மைடய ஜனங்கள் உண்மையை உள் ளபடி பேசுவதின் அவசியத்தையும், பேசியதை நிறைவேற்றி முடிப்ப தும் எவ்வளவு முக்கியமுதானதென்பதையும் வெளிப்படுத்தும்படி, தேவ னாகிய கர்த்தர் தம்மடைய நாமத்தில் செலுத்தும்படியாக கூறினார். பொருத்தனைகளும் ஆணைகளும் தேவனாகிய கர்த்தர் பேரில் இட ப்படுவதால், அதை தவறாமல், முற்றும் முழுவதுமாக நிறைவேற்றி முடி க்க வேண்டியதாக இருந்தது. பயபக்தியுள்ளவர்கள் இதன் தார்பரிய த்தை உணர்ந்து, தேவ பயத்தோடு, தங்கள் வாய்மொழியை நிறைவே ற்றினார்கள். ஏனையோர்கள் மதத்தலைவர்களால் நிர்பந்திக்கப்படுவா ர்கள். காலப்போக்கிலே, மற்ற சட்டதிட்டங்களைப் போல, இந்த ஒழுங் குமுறையும் அதன் சாரத்தை இழந்து, நீதிமன்றங்களிலும், மூப்பர் சங் கங்களிலும், தேவ சபையிலும், வழக்குக்கும், வாதுக்கும், பொய் களை உண்மையைப் போல காண்பிப்பதற்கும், தேவனுடைய நாமத்தின் பேரில் சத்தியம் செய்யும், ஆணையிடவும் ஆரம்பித்தார்கள். அது மட்டுமல் லால், ஒருவனோடு இன்னுமொருவன் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொள் வதற்கு, வானம், பூமி, பலிபீடம், தாய் தந்தையர்களின் பெயர்களை யும் சேர்த்துக் கொண்டார்கள். மனிதர்கள் உண்மையை பேசுவதற்கும், அதை நம்புவதற்கும் இவ்வளவு சிரமமா? நம்முடைய தேவன் இருதங் களை ஆராய்ந்து, மனிதர்களுடைய சிந்தையை அறிகின்றராயிருக்கி ன்றார். எனவே இருதயத்திலே உண்மையுள்ளவர்களாயிருங்கள்.

ஜெபம்:

இருதங்களை ஆராய்தறிகின்ற தேவனே, உமக்கு முன்பாக நான் எப்போதும் உண்மையுள்ளனாக காணப்படும்படி, என் இருதயத்தில் வஞ்சமான சிந்தனைகள் தோன்றாதபடி காத்துக் கொள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 4:2