புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 08, 2025)

உள்ளத்தை உள்ளபடி சொல்லுங்கள்

மத்தேயு 5:37

உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.


ஒரு மாணவனானவன் பாடசாலையிலே சில குழப்பங்களுக்கு காரணமாக இருந்ததால், அவனுடைய பெற்றோர், அவனை கண்டித்து, சில அறிவுரைகளை கூறியிருந்தார்கள். சில நாட்களுக்கு பின்பு, அவன் செய்யாத குற்றத்திற்கு அவன்தான் காரணம் என்று சக மாணவர்கள் குற்றப்படுத்தியிருந்தார்கள். தான் முன்பு செய்த குறும்புச் செயல்க ளினால், தன் பெற்றோhர் தன்னை நம்ப மாட்டார்கள் என்று அவன் கலக்கமடைந்திருந்தான். அதனால், அவன் தான் கூறுவது உண்மை என் பதை உறுத்திப்படுத்துக் கொள்வதற்காக, தான் அதிகமாக நேசித்து வந்ததன் பாட்டியில் பெயரிலே சத்தியம் செய்து கொண்டான். அந்த மாணவன் மாத்திமல்ல, வயதுக்கு வந்த வர்களும் முதியோர்களும், தாங்கள் கூறுவது உண்மை என்று மற்றவர்க ளுக்கு நிரூபிக்கும் பொருட்டு, வேறு மனிதர்களின் பெயரிலோ அல்லது புனித ஸ்தலங்களில் பெயரிலோ சத்தியம் செய்து கொள்வார்கள். ஏன் ஒருவன் அப்படி செய்ய வேண் டும்? ஒருவேளை அவன் கூறும் காரியமானது உண்மையாதாகவோ அல்லது முழுமையான உண்மையாகவோ இல்லாதிருக்கலாம். ஆனால், அவனுக்கு தன் வாய்மையை குறித்து தனக்கே நம்பிக்கையற்ற நிலைமை உண்டாவதாலும், இக்கட்டான சந்தர்ப்பங்களுக்கு தப்பித்துக் கொள்வதற்காகவும் இப்படியாக சத்தியம் செய்து கொள்கின்றார்கள். இவை யாவும் அவசியற்றவைகள் என்று சத்திய வேதமானது ஆதியிலிருந்து கூறுகின்றது. அதாவது நீங்கள் உண்மையை கூறும் போது அதை ஒருவன் அதை நம்பமாட்டேன் என்று அந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுத்தால், அது யாருடைய தவறு? நீங்கள் உண்மையோடு வேறு ஒரு பெரியவருடைய பெயரை சேர்த்துக் கொள்வதால் தேவன் முன்னிலையில் அது இன்னும் அதிக உண்மையாகி விடுவதில்லை. அதுபோலவே, நீங்கள் கூறும் பொய்யோடு ஒரு புனித ஸ்தலத்தின் பெயரை சேர்த்துக் கொள்வதால் அந்தப் பொய்யானது தேவன் முன்னிலையிலே உண்மையாகிவிடுவதில்லை. மனிதர்களுக்கு பயப்படுகின்றவர்கள் இவ்வண்ணமாக ஆணையிடுகின்றார்கள். ஆகை யால், உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லு ங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

சத்தியமுள்ள தேவனே, மருகூட்டும் வார்த்தைகளால் நான் பேசுவது உண்மை என்று நிரூபிக்க எத்தனிக்காமல், உள்ளதை உள்ளதென்று உண்மையை தெளிவாக பேச என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத் 20:16