தியானம் (சித்திரை 07, 2025)
தேவன் மாறாதவராயிருக்கின்றார்
1 யோவான் 2:11
தன் சகோதரனைப் பகைக்கிறவன் இருளிலே இருந்து இருளிலே நடக்கிறான்;
தேவனுடைய ஊழியராகிய மோசே தேவனை நோக்கி: உம்முடைய நாமம் என்ன என்று உம்முடைய ஜனங்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்வேன் என்று தேவனிடத்தில் கேட்ட போது, அதற்குத் தேவன்: 'இருக்கிறவராக இருக்கிறேன்' என்று மோசேயுடனே சொன்னார். இனி வரவிருக்கும் காரியங்களை குறித்து, பரிசுத்த வேதாகமத்தின் கடைசிப் புத்தகத்திலே, தம்மை தேவனுடைய ஊழியராகிய யோவானுக்கு வெளிப்படுத்திய போது, 'இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமாகிய சர்வ வல்லமையுள்ள கர்த்தர்: நான் அல்பா வும், ஒமெகாவும் ஆதியும் அந்தமுமா யிருக்கிறேன்' என்று திருவுளம்பற் றினார். அவர் நேற்றும் இன்றும் என் றும் மாறாதவராகவே இருக்கின்றார் (எபிரெயர் 13:8). கொலை செய்யா திருப்பாயாக என்று மோசே வழியாக கட்டளையை கொடுப்பதற்கு முன்ன தாகவே, முதல் குடும்பத்திலே, தன் இளைய சகோதரனாகிய ஆபேலை அவன் கொலை செய்ய முன், காயீனை நோக்கி: உனக்கு ஏன் எரிச்சல் உண்டாயிற்று? உன் முகநாடி ஏன் வேறுபட்டது? நீ நன்மைசெய்தால் மேன்மை இல்லையோ? நீ நன்மைசெய்யாதிருந்தால் பாவம் வாசற்ப டியில் படுத்திருக்கும்; அவன் ஆசை உன்னைப் பற்றியிருக்கும், நீ அவனை ஆண்டுகொள்ளுவாய் என்றார். அதாவது, மனதிலே தோன் றும் மாம்சத்தின் இச்சைகளாகிய எரிச்சல், வன்மம், பகைமை, கசப்பு போன்றவைகள் இருதயத்திலே தங்க இடம் கொடுக்க வேண்டாம் என்பதையே அவர் ஆதியிலிருந்து நமக்கு கற்றுக் கொடுக்கின்றார். ஒருவன் ஒதான் ளியிலே இருக்கிறேன் என்று சொல்லியும் தன் சகோதரனைப் பகைக்கின்றவனாக இருந்தால், அவன் இதுவரைக்கும் இருளிலே இருக்கிறான். மெய்யான ஒளியாகிய தேவனை இன்னும் அறிய வேண்டிய பிரகாரமாக அறியாதிருக்கின்றான். மனதிலே மறை வாக இருக்கும் இவைகளே சகோதரருக்கு விரோதமான பாவத்தின் வெளியரங்கமான கிரியைகளை உண்டு பண்ணும். எனவே, அது பழைய ஏற்பாடு, இது புதிய ஏற்பாடு என்று தேவனாகிய கர்த்தரின் வார்த்தை களைக் குறித்து தப்பான எண்ணம் கொள்ளாதபடிக்கு, தேவனாகிய கர்த்தரை அறியும் அறியவிலே வளருங்கள். தேவ ஆவியானவருடைய துணையோடு, அவர் ஆதியிலிருந்து விளம்பிய வேதத்தை, அவரு டைய ஜீவ வார்த்தைகளை தொகுத்து, வகையறுத்து கற் றுக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
பிதாவாகிய என் தேவனே, நான்இருளிலே இருந்து இருளிலே நடக்கின்றவனாக இருக்காதபடிக்கும், பகைமையை குறித்து மேன்மை பாராட்டாதபடிக்கும், உம்முடைய வழியிலே நடக்க உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 5:21-22