புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 04, 2025)

தேவனிடத்திலே மன்னிப்பு உண்டு

1 யோவான் 1:7

அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.


சில ஆண்டுகளுக்கு முன்னதாக, தேவனுடைய சமுத்ததிலே, விவாக வாக்குமூலத்தை அறிக்கையிட்டு, திருமணம் செய்து கொண்ட விசுவா மார்கத்தை சேர்ந்த ஒரு இளம் தம்பதிகள், மிகவும் ஒழுக்கமுள்ளவர் களாக வாழ்ந்து வந்தார்கள். வாழ்க்கையிலே ஏற்பட்ட சில சவால்க ளையும், போராட்டங்களையும் தீர்த்து வைப்பதைக் குறிதத கருத்து முரண்பாடுகள் அவர்களுக்குள் அதிகரித்து வந்ததால், இருவரும் நீதிமன்றத்திற்கு சென்று, சட் டப்படி தன் மனைவியை விவா கரத்து செய்து கொண்டான். தேசத்தின் விவாக பதிவேற் புப் புத்தகத்திலே, அவன் மனைவி, இப்பொழுது அவனு டைய மனைவியல்ல. அவன் விரும்பிய இன்னுமொரு ஸ்தி ரியையும், அவள் விரும்பிய இன்னுமொரு மனுஷனையும் மறுமணம் செய்து கொள்ள தேசத்தின் சட்டப்படி அவர்கள் தகுதி பெற்றவர்களாக இருந்தார்கள். ஆனால், தேவனாகிய கர்த்தர் முன்னிலையிலே, அவர்கள் செய்து கொண்ட வாக்குறுதியானது இன்னும் தள்ளுபடியாகவில்லை. நாட்டின் சட்டம், தேவனுடைய வார்த்தையை மாற்றிவிட முடியாது. அவர்கள் தேவனு டைய பார்வையிலே இன்னும் கணவனும் மனைவியுமாக இருப்பதால். அவர்கள் வேறொருவரை திருமணம் செய்யும் போது, தேவனுடைய பார்வையிலே விபசாரம் செய்கின்றவர்களாக இருக்கின்றார்கள். தன் மனைவியைத் தள்ளிவிடுகிற எவனும், தள்ளுதற்சீட்டை அவளுக்கு கொடு க்கக்கடவன் என்று உரைக்கப்பட்டது. நான் உங்களுக்குச் சொல்லு கிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளி விடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப்பண்ணுகிறவனாயிருப்பான்;. அப்படித் தள்ளிவிடப்பட்டவளை விவாகம்பண்ணுகிறவனும் விபசாரஞ் செய்கிறவனாயிருப்பான் என்று ஆண்டவராகிய இயேசு தாமே, விவா கத்தைக் குறித்த தேவ கட்டளையின் முழுமையான நோக்கத்தை விள க்கிக் கூறியிருக்கின்றார். (மத்தேயு 19:3-9) சிலர் இந்த வார்த்தைகளை நன்றாக அறிந்தும், வேறு சிலர் இதன் தார்பரியத்தை உண்மையாக அறியாலும் பாவம் செய்கின்றார்கள். அப்படிப்பட்ட வர்கள், தொடரந் தும் பாவத்திலே வாழாதபடிக்கு, பாவங்களை மனதார அறிக்கையி ட்டால், பாவங்களை மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி சுத்தி கரிப்பதற்கு தேவன்தாமே உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். உமது கிருபையின்படி எனக்கு இரங்கும். உம்முடைய நிலைபரமான ஆவி அடியேனை தாங்கச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 51:17