புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 03, 2025)

இருதங்களை ஆராய்ந்தறிகின்றவர்

எரேமியா 17:10

இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.


ஒரு ஊரிலே, ஜனங்கள் மத்தியிலே நன்மதிப்பை பெற்ற ஒரு ஐசுவரி யவானிருந்தான். திருமணமாகி அநேக வருடங்களுக்கு பின், தன்னு டைய மனைவியை விவாகரத்து செய்து கொள்ள தீர்மானித்தான். தான் ஒரு சன்மார்க்கன் எனவே, அதை முறைப்படி செய்ய வேண்டும் என்று, தேசத்தின் சட்டதிட்டங்களுக்கமைய ஒழுங்கு முறைகள் யாவற்றையும் பின்பற்றி, தன்னோடு இருபந்தை ந்து வருடங்கள் நெறிமுறை யோடு வாழ்ந்த மனைவிக்கு, தன் சொத்துகளின் ஒரு பகுதி யை கொடுத்து, அவளை விவா கரத்து செய்து கொணடான். அதைக் கண்ட ஊராரில் பலர் அவன் தாராள உள்ளம் கொண்ட யோக்கியமுள்ள மனுஷன் என்று கூறிக் கொண்டார்கள். தேசத்தின் சட்டம் அவனுடைய செயலை அங்கீ கரித்தது. ஊரார் அவனுடைய நடவடிக்கைகளை ஏற்றுக் கொண்டார்கள். அவனுடைய உறவினர் நண்பர்கள் அவனுடைய தாராள குணத்தை மெச்சினார்கள். ஆனால், அவனுடைய செயலானது தேவனுடைய சமு த்திலே ஏற்றுக் கொள்ளப்படுமோ? இல்லை. நல் ஒழுக்கத்தோடு வாழ் ந்து வரும் அவன் மனைவி உயிரோடிருக்க, ஒரு இளவயதுள்ள பெண் ணின்மேல் இச்சை கொண்டதால், அந்தப் பெண்ணை தனதாக்கி கொள்ள வேண்டும் என்று வயது சென்ற தன் மனைவியை தள்ளிவி ட்டான். விவாகரத்தின் ஒழுங்கு முறை மோசே வழியாக கொடுக்க ப்பட்டது. அக்காலத்திலே அதை தள்ளுதல் சீட்டு என்று கூறினார்கள். இந்த பதமானது, அன்றிருந்த, புருஷர்களில் சிலருக்கு மிகவும் ஏற்பு டையதாக இருந்தது. அதாவது, மிக இலகுவாக தங்கள் மனைவியை சட்டபப்படி தள்ளிவிட்டு, தேவ கட்டளையின்படியே விவாகரத்ரை செய்தேன் என்று கூறிக் கொண்டார்கள். இவர்கள் தங்கள் இச்சையை நிறைவேற்ற, தேவனுடைய கட்டளைகளை வியத்தமாக்குகின்றவர் களாக வாழ்ந்து வந்தார்கள். 'ஒருவன் பதிவிருந்து கொல்லாமல், தேவ ச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப் போய்ச் சேரவேண்டிய ஸ்தலத்தை உனக்கு நியமிப்பேன்.' என்று தேவ னாகிய கர்த்தர் கூறியிருப்பதால், தங்கள் எரிச்சலை திருப்தியாக்க எதி ரியை கொன்று, தேவச்செயலாய் அதை செய்தேன் என்று கூறி விடுகி ன்றார்கள். பிரியமானவர்களே, தேவனுடைய கற்பனைகளையும், அதன் நோக்கத்தையும் அறிந்து கொள்ளுங்கள். தேவன் மனிதர்களின் இருத ங்களை ஆராய்ந்தறிக்கின்றவர். எனவே அவருக்கு முன்பாக உத்தம மாய் நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

இருதயத்தை ஆராய்ந்து என்னுடைய சிந்தையை அறிகின்ற தேவனே, நான் என் உள்ளத்திலே அக்கிரம சிந்தை கொள்ளாதபடிக்கு, உமக்கு முன்பாக உத்தமனாக வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ரோமர் 8:27