புதிய நாளுக்குள்..

தியானம் (சித்திரை 02, 2025)

வேத வாக்கியங்களின் நோக்கம்

மத்தேயு 22:29

நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.


ஆதியிலே ஆதாம், ஏவாள் தங்;களுக்கு கொடுக்கப்பட்ட சுயாதீனத்தை துஷ;பிரயோம் செய்து, தேவனுடைய கட்டளையை மீறி, பிசாசான வனு டைய சத்தத்திற்கு இடம் கொடுத்ததால், அதன் பின்விளைவாக தேவ சயாலை இழந்து, நித்திய மரணத் திற்குள்ளார்கள். அதனால், நாம் பாவம், மரணம், கீழ்படியாமை என்ற பதங்களை வேதத்திலே முதன் முறையாக காண்கின்றோம் அவர்களுடைய மூத்த குமாரனா கிய காயீன், தேவனுடைய சத்த த்திற்கு செவி கொடுக்;க்க மனதி ல்லாமல் போன போது, அவன் தன் இளைய சகோதரனாகிய ஆபே லை கொலை செய்தான். அதனால், எரிச்சல், கொலை என்ற பதங் களை வேதத்திலே முதன்முறையாக காண்கின்றோம். இப்படியாக, எந்த மனிதனும் தேவனுடைய சத்ததிற்கு கீழ்படியாமல் போகும் போது, அந்த இடத்திலே பாவமும், அதனால் உண்டாகும் பின்விளைவுகளும், புதிய தீமையான பதங்க ளையும் அறிந்து கொள்கின்றோம். உண்டா கின்றது. ஆதியிலே, தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ; டித்தார், அவனைத் தேவ சாயலாகவே சிருஷ;டித்தார்; ஆணும் பெண் ணுமாக அவர்களைச் சிருஷ;டித்தார். ஸ்திரியானவள், புருஷனிலிருந்து எடுக்கப்பட்டாள். இதனிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயை யும்விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம் சமாயிருப்பார்கள் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. ஆனால், ஒரு புருஷன் தன் மனைவியிருக்க வேறொரு ஸ்திரியை இச்சி த்தான். அதனால், விபசாரம் என்ற பாவமும், அதனால் உண்டாகும் பின்விளை வுகளும் மனிதனால் உருவாக்கப்பட்டது. அதனால், விவாகரத்து என்று பதத்தை வேதத்திலே காண்கின்றோம். கருப்பொருளாவது, விவாகரத்து என்பது தேவனால் உண்டாகவில்லை. மனிதனானவன், தேவனுடைய கட் டளையை தள்ளிவிட்டதால், அவன் மனதிலே உண்டான இச்சையினால் உண்டானது. இப்போது, விவாகரத்து என்று ஒரு பதம் வேதத்திலே இரு ப்பதனால், தேவ ஜனங்கள், தங்கள் மனைவியை எப்படி வேத பிரம ணாத்தின்படி தள்ளிவிட்டு, தங்களை நீதிமான்களாக காண்பிக்கலாம் என்ற எண்ணங் கொள்கின்றார்கள். தங்கள் இச்சையை நிறைவேற்றி முடி த்ததும், நான் தேவ வார்த்தையின்படி அதை செய்தேன் என்று திருப்தி யடைகின்றார்கள். பிரியமானவர்களே, தேவ வார்த்தைகள், நாம் நம்மு டைய இச்சைகளை நிறைவேற்றக் கொடுக்கப்படாமல், நித்திய ஜீவனு க்கென்று கொடுக்கப்பட்டிருக்கின்றது.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, உம்முடைய ஜீவ வார்த்தைகளை என் துர்குணத்திற்கு மூடலாக பயன்படுத்தாமல், உம்முடைய சித்தத்தை என் வாழ்வில் நிறைவேற்ற பய்படுத்த கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஆதியாகமம் 2:24