தியானம் (சித்திரை 01, 2025)
தேவனை மறந்து போன சந்ததி
ஏசாயா 24:5
தேசம் தன் குடிகளின் மூலமாய் தீட்டுப்பட்டது;
கிறிஸ்துவின் உபதேசத்திலே கட்டப்பட்ட ஒரு தேசத்திலே, பாடசாலைகளிலே இருந்து கிறிஸ்தவத்தை கற்பிப்பித்து கொடுப்பதை அந்த தேசத்தின் அதிகாரிகள் நிறுத்திவிட்டார்கள். பெற்றோர்களில் பலரும், அது அநாவசியமான பாடம், அந்த நேரத்திலே, வேறு அநேக காரியங்களை கற்றுக் கொள்ளலாம் என்று எண்ணிக் கொண்டார்கள். சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு பின்னர், தேவ பக்தியற்ற சந்ததி பெருக ஆரம்பித்தது. தேவனைக் குறித்த பயம் இளம் சந்ததியினருடைய இருதயத்தில் இல்லாதிருந்தது மட்டுமல்ல, இரட்சிப்பை உண்டாக்கும் நாமமாகிய இயேசு கிறிஸ்து வின் நாம்த்தை உச்சரிப்பது அவர்களுக்கு விசனமாயும், இடறலாயும் இருந்தது. பெரும்பான்மையானனோர், தங்கள் தங்கள் மனதிற்கு சரியாக தோன்றியதை செய்ய ஆரம்பித்தார்கள். கர்த்தருடைய வேதத்தை மறந்து போனதினாலே, தேசம் தன் குடிகளின் மூலமாய் தீட்டுப்பட்டது. பலருடைய வாழ்க்கையானது பொருளாதார செழிப்பும்; உல்லாசமான வாழ்க்கையும் என்ற அடிப்படையிலே கட்டப்பட்டது. திருமணம் என்ற பதமானது, அதன் தூய்மையை இழந்து போயிற்று. திருமணமில்லாமல் குடும்பங்கள் கட்டப்படலாம். விரும்பிய நபரை விரும்பி நபர், விரும்பிய போது திருமணம் செய்து கொள்ளலாம். நாட்கள் சென்றபின்பு, அவர்கள் ஏதோ காரணத்திற்காக, விம்பியபடி, விரும்பிய நேரத்தில், விவாக ரத்து செய்து கொள்ளலாம். இதனால், அநேக பிள்ளைகள், தாய், தந்தையின் அரவணைப்பில்லாமல், சிறிய பருவத்திலிருந்தே, பலவிதமாக சவால்களுக்கும், பிரச்சனைகளுக்கும், துஷ;பிரயோகங்களுக்கும் உள் ளாக்கப்பட்டார்கள்;. அதன் விளைவாக சிலர் மனநோய்க்குள்ளானார்கள், வேறு சிலர் பலவிதமான துர்மார்க்கமான வழிகளிலே செல்ல ஆரம்பித்தார்கள். இன்னும் சிலர், வீடு வாசல் இல்லாமல், பெற்றோரின் பாசம் என்றால் என்ன என்பதை உணராமல், வாழ்ந்து, தங்களை தாங்களே பல வழிகளிலே கெடுத்துக் கொண்டார்கள். சில தசாப்தங்கள் கடந்து சென்றபின்பு, ஏன் இத்தனை பிரச்சனைகள், இவை எங்கே ஆரம்பித்தது? இதன் அடிப்படைக் காரணம் என்ன? என்பதை ஆராய்ந்து உணர்ந்து கொள்ளாமல், வாழ்க்கை முறையை வேதத்தின்படி சரிசெய்வதற்கு, பதிலாக, பின்விளைவுகளை சமாளித்துக் கொள்வதற்காக தேவனுக்கு விரோதமாக சட்டங்களை ஏற்படுத்திக் கொண்டா ர்கள். பிரியமான வர்களே, தேவ பயமற்ற சந்ததியின் முடிவு பரிதாபமாக இருக்கும். எனவே நீங்கள் தேவனுக்கு பயந்து அவர் காட்டிய வழியிலே நடந்து, பிள்ளைகள் நடக்க வேண்டிய வழியை போதியுங்கள்.
ஜெபம்:
நித்திய வாழ்விற்காக என்னை அழைத்த தேவனே, நான் உம்முடைய வழிகளை விட்டு ஒருபோதும் விலகிப் போய்விடாதபடிக்கு, உணர்வுள்ள இருயத்தை எனக்கு தந்து என்னை உம் வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 127:1-2