தியானம் (பங்குனி 31, 2025)
நித்திய வழியிலே நடவுங்கள்
சங்கீதம் 139:23
தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்;
ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விசுவாசியானவன், தன் வாழ்விலே பற்பல நற்கிரியைகளை செய்து வந்தான். நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிப்பதற்கு அவன் ஒரு போதும் பின்நிற்பதில்லை. ஆனாலும், அவனிடத்திலே ஒரு குறைவு இருந்தது. சபையின் அதிகாரங்களுக்கு கீழ்படிவது அவனுக்கு ஓயாத பிரச்ச னையாக இருந்தது. மூப்பர்கள், மேய்ப்பர்களுடைய ஆலோசனைகள் கேட்டு, அதை தன் வாழ்விலே கைகொள்வது அவனுக்கு மிகவும் கடினமாக இருந்து வந்ததும். ஆண் டுகள் கடந்து சென்றதும், அதிகார த்திலுள்ளவர்களுடைய ஆலோச னையையும் தட்டிக் கழிப்பதும், எச்சரிப்பை அற்பமாக எண்ணுவதும் அவனுக்கு பழக்கமாக மாறிவிட்டது. எனினும், கிறிஸ்த நாட்காட்டியிலே நல்ல நாட்கள் பெருநாட்கள் வரும் போது, அந்த நாட்களிலே நீண்ட ஜெபக் கூட்டங்களை ஏற்படுத்துவதும், உபவாசிப்பதும் அவனுக்கு வழக்கமாக இருந்தது. அப்படியாக அவன் ஜெபத்திலும் உபவாசத்திலும் இருக்கும் நாடக்ளிலும், நான் கர்த்தருடைய நல் ஆலோசனைகளை எனக்கு கூறுபவர்களுக்கு கீழ்படியாமல் இருக்கின்றேன் என்ற எண்ணமோ, அதைக் குறித்த உண ர்வோ அற்ற வனாக இருந்து வந்தான். பரலோக ராஜ்யத்திற்கென்று அழைக்கப்பட்ட அருமையான சகோதர சகோரிகளே, ஒருவன் தன் இருதயமானது நோய் கொண்ட இருதயம் என்று உணராதிருப்பது எவ்வளவு பரிதாப மான நிலைமை என்பதை சிந்தித்துப் பாருங்கள். அவிசுவாசிகளும், நாம் விட்டுவந்த பழைய மார்க்கத்தாரும், பெருநாட்கள், கடன் திரு நாட்கள் என்று பற்பல நாட்களை சிறப்பித்து வருகின்றார்கள். அது போலவே, நாமும், மாதப்பிறப்புக்களையும், பெருநாட்களையும் சிறப்பிக்க வேண்டும் என்ற மனநிலை தவறானது. ஒரு விசுவாசியானவன், முதலாவதாக, கர்த்தருடைய வார்த்தையிலே நிலைத்திருக்க வேண்டும். அதன்படிக்கு பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை தன் வாழ்வில் நிறைவேற இடம் கொடுக்க வேண்டும். அந்த பாதையிலே, உபத்திரவங்களை சகிப்பது தேவனுக்கு சித்தமானால், அவர் அதற்கு வேண்டிய கிருபையை, தகுந்த வேளையிலே, நமக்கு அளுளிச் செய்வார். எனவே, மனதிலே மறைந்திருக்கும், பாவங்களை பழைய பாவங்கள் என்று உணர்வற்றவர்களைப் போக இடம் கொடுக்காமல், வேதனை உண்டாக் கும் வழிகளை ஆராய்ந்து பார்த்து, அவைகளை கர்த்தரிடத்தில் அறிக்கையிடங்கள். தேவ ஆவியானவர் பெலன் தந்து நடத்துவாராக.
ஜெபம்:
அன்பின் தேவனே, உம்முடைய சத்தத்தை கேளாதபடிக்கு, என்னுடைய சுத்தமனசாட்சியானது சூடுண்டு போகாதபடிக்கு, நீ என்னோடு பேசும் போது, உம் வார்த்தைக்கு கீழ்படிந்து நடக்கும் இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 பேதுரு 2:24