தியானம் (பங்குனி 29, 2025)
உங்கள் சிந்தையை காத்துக் கொள்ளுங்கள்
மத்தேயு 5:29
உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயி ருக்கும்.
'என் கர்த்தருக்காக எதையும் செய்வேன். காடானாலும் மேடானாலும் நான் கர்த்தருக்கு தொண்டு செய்வேன்' என்ற வரிகளை கொண்ட பல பாடல்களை விசுவாச மார்க்கத்தார் அழகாக பாடுகின்றார்கள். நற்செய் தியை அறிவித்து, ஒருவனை தங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திர த்தையும் பூமியையும் சுற்றித்திரிய ஆயத்தமுள்ளவர்களாக இருக்கி ன்றார்கள். ஆனால், தங்கள் மனதிலே மறைந்திருக்கும் மாம்சத்தின் ஆசை இச்சைகளை விட்டுவிட மனதில்லாதி ருக்கின்றார்கள். எடுத்துக்காட்டாக, சக விசுவாசிகளோடு கருத்து முரண்பாடு கள் ஏற்படும், விட்டுக் கொடுக்க, பொறு மையை காத்துக் கொள்ள, மன்னி த்து மறந்து விட, மனதற்றவர்களாக, கோபம் கொண்டு, சண்டைகளையும், கலகங்களையும், பிரிவினைகளையும் ஏற்படுத்தி விடுகின்றார்கள். 'என் நாம த்தினிமித்தம் வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையா வது, தகப்பனையாவது, தாயையாவது, மனைவியையாவது, பிள்ளைக ளையாவது, நிலங்களையாவது விட்டவன் எவனோ, அவன் நூறத்த னையாய் அடைந்து, நித்திய ஜீவனையும் சுதந்தரித்துக்கொள்ளுவான்;' என்று ஆண்டவராகிய இயேசு கூறிய வார்த்தைகளை தவறாக புரிந்து கொண்டு, பெற்றோரைக்குறித்து, தங்கள் குடும்பத்தை குறித்த கடமைகள், பொறுப்புக்களை சீக்கிரமாக விட்டுவிட்டு சுவிசேஷம் அறி விக்க ஆயத்தமாயிருக்கின்றார்கள். ஆனால், மனதில் தோன்றும் பொல் லாத சிந்தனைகளை தேவனுடைய ராஜ்யத்திற்காக விட்டுவிட பெலன் இல்லை என்று கூறிவிடுகின்றார்கள். பிரியமானவர்களே, தேவனுடைய ராஜ்யத்திற்கு நிகரான பொக்கிஷங்கள் இந்த உலகிலே, நம்முடைய வாழ்க்கையிலே எதுவுமில்லை என்பதை விளக்கிக் கூறுவதற்காக, ஆண் டவராகிய இயேசுதாமே 'உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக் கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத் தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டு ப்போவது உனக்கு நலமாயிருக்கும்.' என்ற ஒப்பனையை கூறியிருக்கி ன்றார். அதாவது, நீ இந்த உலகத்திலே, பரலோக ராஜ்யத்திற்காக உன் உயிரை இழக்க நேரிட்டாலும், அதை இழந்து, பரலோக ராஜ்யத்தை பற்றிக் கொள்ள வேண்டும். எனவே, உங்கள் சிந்தனைகளை தேவ வார்த் தை யினால் நிறப்பிக் கொள்ளுங்கள். ஆவியானவர்தாமே உங்களுக்கு பெலன் தந்து வழிநடத்துவீராக.
ஜெபம்:
அன்புள்ள தேவனே, அற்பமான மாம்ச இச்சைகளுக்காக, அழியாத பரலோக மேன்மையை நான் இழந்து போகாதபடிக்கு, என் இருதயத்தை எல்லாக் காவலோடும் காத்துக் கொள்ள எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 19:29