தியானம் (பங்குனி 28, 2025)
நம்முடைய ஐக்கியம் தேவனோடு...
பிலிப்பியர் 3:8
என் கர்த்தராகிய கிறி ஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொ ண்டிருக்கிறேன்.
கடந்த நாளிலே, இந்த உலகத்திலே நன்மையாக தோன்றும், திரண்ட ஆஸ்தி, உயர்ந்த கல்வி, பதவி செல்வாக்குகள் எப்படியாக பரலோக ராஜ்யத்தை அடைவதற்கு சிலருடைய வாழ்க்கையிலே இடறலாக மாறிவிடுகின்றது என்பதை தியானித்தோம். வேறு சிலருடைய வாழ் க்கையிலே, சொந்தபந்தங்கள், உறவுகள், நண்பர்கள், நட்சத்திரங்கள் இடறலாக மாறிவிடுகின்றார்கள். அதா வது, ஒரு சாரார், மனிதர்களை திருப் திபடுத்தும் பொருட்டு, ஆண்டவர் இயே சுவினால் உண்டாகும் இரட்சிப்பை ஏற்றுக் கொள்ள மனதில்லாதிருக்கின் றார்கள். இன்னும் சிலர், இரட்சிப்பை அடைந்த பின்னர், தங்கள் மனிதர் களை திருப்திபடுத்தும் பொருட்டு, பின்மாற்றமான வாழ்க்கைக்கு தங்க ளை ஒப்புக் கொடுகின்ற மனக்கண்கள் சொருகிப்போன குருடர்களாக மாறிவி டுகின்றார்கள். இந்த உலகத்தின் மேன்மைக்குள் சிக்குண்டிருந்தவர்கள், ஆண்டவர் இயேசுவை அறிந்த போது, எல்லா உலக மேன்மைகளை யும் அற்பமும் குப்பையுமென்று எண்ணி, அவைகளை தள்ளிப் போட்டா ர்கள். ஆனால், உலகத்திலுண்டான மேன்மைகள் எதுவுமில்லாமல், சமு தாயத்தினால் தள்ளுண்டுபோனவர்களை, ஆண்டவர் இயேசு தூக்கி எடுத்து, அவர்களை ஆசீர்வத்தித்த பின்னர், இந்த உலகத்தில் தேவ னை அறியாவதவர்களோடுள்ள ஐக்கியத்திலே தங்களை மறுபடியும் பிணைத்துக் கொள்கின்றார்கள். அவைகளை அவர்கள் முன்னர் அறி யாதிருந்ததால், தாங்கள் பெற்றுக் கொண்ட மேன்மையை சமரசம் செய்ய தங்களை ஒப்புக் கொடுகின்றார்கள். சபையிலே இருக்கும் ஐக் கியத்தைவிட, தாங்களும் தங்கள் பிள்ளைகளும் ஏற்படுத்திக் கொள் ளும் உலக தொடர்புகளை தங்கள் இருதயங்களிலே மேன்மைபாரா ட்டுகின்றார்கள். அந்த அழிந்து போகும் மேன்மைகள் அவர்களுக்கு இடறலாக மாறிவிடுகின்றது. பரலோக ராஜ்யத்திற்கென்று அழைப்பை பெற்ற அருமைய சகோதர சகோதரிகளே, உங்களை நீங்களே ஆராய் ந்து அறிந்து கொள்ளுங்கள். உங்கள்; இருதயங்களிலே எந்த ஐக்கியம் மேன்மையாக இருக்கின்றது? உங்கள் பிள்ளைகள் யாரோடு ஐக்கிய மாக இருக்கும் போது அது உங்கள் இருதயத்திலே சந்தோஷத்தை கொடுக்கின்றது. உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகை என்று அறியீர்களா? நீங்களே உங்களை இடறல்படுத்தாதபடிக்கு தேவனைப் பற்றிக் கொண்டிருங்கள்.
ஜெபம்:
பரலோக பிதாவே, பரலோக ராஜ்யத்தின் மேன்மையை அடைவற்காக இந்த உலகத்திலுள்ளவைகளை நஷ்டமென்று விட்டுவிட்டு, அவைகளை குப்பையுமாக எண்ணும் ஞான இருதயத்தை தந்து நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - 1 யோவான் 1:3