தியானம் (பங்குனி 27, 2025)
அழியாத மேன்மையை நாடுங்கள்
மத்தேயு 6:33
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்க ளுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
அன்றியும், பரலோகராஜ்யம் நிலத்தில் புதைந்திருக்கிற பொக்கி ஷத்து க்கு ஒப்பாயிருக்கிறது. அதை ஒரு மனுஷன் கண்டு, மறைத்து, அதை ப்பற்றிய சந்தோஷத்தினாலே போய், தனக்கு உண்டான எல்லாவற்றையும் விற்று, அந்த நிலத்தைக் கொள்ளுகிறான் என்று பரலோக ராஜ்யத்தின் மேன்மையைக் குறித்து ஆண்டவராகிய இயேசு ஒரு உவமையை கூறினார். அதாவது, பரலோக ராஜ்யத்தின் மேன்மையை உணர்ந்தவன், இந்த பூவுலகிலிருக்கும் எந் தக் காரியமும் அதற்கு நிகரானதல்ல என்பதை அறிந்து, அந்த அழியாத மேன்மையை பெற்றுக் கொள்ளும்படிக்கு இந்த வாழ்க்கையிலே எதையும் இழந்துவிட ஆயத்துமுள்ளவனாக இரு ப்பான். அதனால் தான், அந்த மேன் மையானதை முதலாவதாக தேடும்ப டிக்கு ஆண்டவராகிய இயேசு கூறிகியி ருக்கின்றார். ஆனால், மனிதர்களுடைய வாழ்க்கையிலே, அந்த மேன்மையை பெற்றுக்கொள்ளாதபடிக்கு பல வழிகளிலே இடறல்கள் உண்டாகின்றது. அவைகளில் சில மனித ர்களுக்கு நன்மையாக தோன்றுகின்றது. உலக ஆஸ்திகள், உயர்ந்த கல்வி, சமூக செல்வாக்குகள் போன்றவற்றை சிலர் தேவனுடைய ஆசீர்வாதம் என்று இறுகப்பற்றிக் கொண்டு, அவைகளை பரலோக ராஜ்யத்தைப் பார்க்கிலும் அதிகமாய் வாஞ்சிக்கின்றார்கள். ஒரு சமயம், ஒரு ஐசுவரியமுள்ள வாலிபன் ஆண்டராகிய இயேசுவை சந்திக்க வந்தான். அவன் நித்திய ஜீவனை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற வாஞ்சையுடையவனாக இருந்தான். அதன்பொருட்டு, தேவனுடைய கட்டளைகளை சிறு வயது முதல் கைக்கொண்டு வந்தான். ஆனாலும், அவனுடைய ஐசுவரியம் அவனுக்கு ஒரு குறை இருப்பதை ஆண்டவர் இயேசு கண்டு, அவனிடத்தில் அன்பு கூர்ந்ததால், அவனுக்கு அதை தெரிவித்தார். ஆனால், அவன் பரலோக பொக்கிஷத்தைவிட தன்னிடத்திலிருந்த திரளான செல்வத்தை நேசித்ததால், துக்கத்தோடே திரும்பிப் போய்விட்டான். அவனிடமிருந்த ஐசுவரியம் அவனுக்கு இடறாலாக இருந்தது. இப்படியாக, சிலருக்கு ஐசுவரியமும், வேறு சிலருக்கு கல்வியும், இன்னும் சிலருக்கு இந்த உலகத்தின் பதவி செல்வாக்குகளும் பரலோக ராஜ்யத்தை பெற்றுக் கொள்ள இடறலாக மாறிவிடுகின்றது. நாம் எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.
ஜெபம்:
அழியாத ராஜ்யத்திற்காக என்னை அழைத்த தேவனே, அழிந்து போகின்ற இந்த உலகத்தின் மேன்மைகளை நான் பற்றிக் கொள்ளாத படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்ககை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 13:44-50