புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 25, 2025)

பின்வாங்காமல் முன்னேறுங்கள்

மத்தேயு 23:3

ஆகையால், நீங்கள் கைக் கொள்ளும்படி அவர்கள் உங்களுக்குச் சொல்லுகிற யாவையும் கைக்கொண்டு செய்யுங்கள்; அவர்கள் செய்கையின்படியோ செய்யாதிருங்கள்;


ஒரு பாடசாலையிலே சுகாதாரக் கல்வியை கற்றுக் கொடுக்கும் ஆசி ரியர் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சுகாதாரத்தின் அவசியத்தை வலியுறுத்தி கூறிவந்தார். அந்தப் பாடத்திட்டத்தை நன்றாக அறிந்திருந்தார். கற்றுக் கொடுப்பதில் அவருக்கு அநேக வருட அனுபவம் இருந்ததால், அதை முறைப்படி, மணாவர்கள் புரிந்து கொள்ளும் விதத்திலே கற்றுக் கொடுத்து வந்தார். ஆனாலும், அவரிடத்தில், புகை பிடிக்கும் பழக்கமும், மதுபான வெறி கொள்ளும் பழக்க மும் இருந்தது. அதனால், அவர் வாழ்க்கையிலே சுகாதராத்தையும், ஆரோ க்கித்தையும் காண முடியவில்லை. அதனால், அந்த வகுப்பிலுள்ள ஒரு மாணவன், இவர் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் என்று அவர் கூறுபவவைகக்கு தன் செவியை அடைத்து, வீட்டுப்பாடங்களை செய் யாமற் போனான். அதனால், தவண பை; பரீட்சையில் அவன் சித்திபெறாமல், மிக குறைந்து புள்ளிகளை பெற்றுக் கொண்டான். உண்மையிலே அவனுடைய பிரச்சனையானது, அந்த ஆசிரியருடைய வாழ்க்கைக் குறித்த காரியம் அல்ல. மாறாக, அவன் படிக்காமல் இருப்பதற்கு சாட்டுப் போக்குகளை தேடுகின்றவனாக இருந்து வந்தான். யாரோ ஒரு அதிபர் அல்லது ஆசிரியர், ஏதாவது தவறை செய்துவிட்டால், அவன் அதை பெருதாக்கி, இவர்கள் எல்லோரும் கள்ளவர்கள் என்று கூறி, தன் சுய இச்சைகளை நிறை வேற்ற வழி தேடிகின்றவாக வாழ்ந்து வந்தான். இன்றைய நாட்களில், இப்படியான அந்த மாணவர்களை போன்ற மனதுள்ள சில விசுவாசிகளை நாம் சபைகளிலே காண்கின்றோம். அந்த மாணவனைப் போன் றவர்கள் சபைக்கு செல்வதால் அவர்களை விசுவாசிகள் என்று அழை க்கின்றோம். ஆனால், அவர்கள் தங்கள் வாழ்க்கையை தாங்கள் விரு ம்பியபடி வாழ்வதற்கு தேவனுடைய வார்த்தைகள் தடையாக இருப்பதால், தவறிப் போகின்ற சில ஊழியர்களை சுட்டிக்காட்டி, தாங்கள் சபைக்கு செல்லாதிருப்பதில் காணரத்தை நியாயப்படுதிக் கொள்கின் றார்கள். பிரியமானவர்களே, பரிசேயரும், வேதபாரகரும் அந்த ஆசிரி யருக்கு ஒத்தவர்களாக இருந்தார்கள், நீங்களோ, அவர்கள் சொல்வதை செய்யுங்கள், அவர்கள் செய்வததை செய்யாதிருங்கள் ஏனெனில், அவர்கள் சொல்லுகிறார்கள், சொல்லியும் செய்யாதிருக்கிறார்கள். என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, கோணலும் மாறுபாடுமான உலகிலே, மற்றவர்களுடைய தவறுகளை கண்டு பின்வாங்காமல், உமக்கு முன்பாக நான் உண்மையுள்ளவனாக இருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1-2