புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 24, 2025)

இருமனமுடையவர்கள்

யாக்கோபு 4:8

இருமனமுள்ளவர்களே, உங்கள் இருதயங்களைப் பரிசுத்தமாக்குங்கள்.


ஒரு விசுவாசியாவன், தன் வாழ்விலே, வெளியரங்கமாக மாம்ச இச்சைகளை நிறைவேற்றாமலும், குற்றத்திலே கையும் களவுமாக அகப்பமாமல் இருக்கும் போது, புறம்பே அவனைக் காண்கின்றவர்கள் அவனை நீதிமான் என்று அழைத்துக் கொள்வார்கள். எடுத்துக் காட்டாக, சாராசரி சம்பளத்துடன் வாழும் ஒரு விசுவாசியாவன், தனக்கு பொருளாசை இல்லை. தன்னிடம் இருப்பது போதும் என்று கூறிக் கொண்டான். அவனுடைய பேச்சை கேட்ட சக விசுவாசிகளில் பலர் அவனை மெச்சினார்கள். அவனுடைய பொக்கிஷம் பரலோகத்தில் இருக்கின்றது என்று கூறிக் கொண் டார்கள். ஆனால், அவனுடைய மனதிலேயோ, பிறனுடைய உடமைகள் காணும் போதெல்லாம், நான் ஏன் இப்படி ஒரு பிச்சைக்காரனைப் போல வாழ வேண்டும் என்று உலக பொருட்களை தன் உள்ளத்திலே இச்சித்துக் கொண்டிருந்தான். அவன் இருமனமுடையவனாக வாழ்ந்து வந்தான். இதற்கொத்தாவே, அந்நாட்களிலே இருந்த மதப்பற்றுள்ள வர்கள், வெளியரங்கமாக கொலை பாதகராக இருக்கவில்லை. விப சாரம் செய்கின்ற வர்களாக இருக்கவில்லை. அப்படி வெளியரங்கமாக கொலை செய்பவர்களையும், விபசாரசத்தில் கையும் களவுமாக பிடிபட் டவர்களுக்கும் உடடினாயாக தகுந்த தண்டனை நிறைவேற்றிவிடு வார்கள். ஆனால், அவர்கள் உள்ளத்திலோ, கொலை பாதகத்திற்குரிய மாம்சத்தின் இச்சைகளும், விபசாரத்திற்குரிய ஆசை இச்சைகளும் நிறைந்திருந்தது. மனிதர்கள் வெளியரங்கமான கிரியைகளை பார்கின்றா ர்கள். ஆனால், தேவனாகிய கர்த்தரோ மனிதர்களுடைய இருதயங்க ளையும், அவர்களுடைய சிந்தைகளையும் ஆராய்தறிக்கின்றார். அத னால், நாம் பாவமற்ற சம்பூரண பரிசுத்தராக இருக்க வேண்டும் என்று தேவனாகிய கர்த்தர் கூறவில்லை. மனதிலே பலவிதமான சிந்தனைகள் அவ்வப்போது தோன்றினாலும், பொல்லாத சிந்தனைகள் குடிகொ ள்ளும் இடமாக எங்கள் இருதயத்தை நாம் மாற்றிக் கொள்ள கூடாது. 'எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலை பாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய் ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, உள்ளத்திலுள்ளவைகளை மறைக் காமல், தேவனிடத்திலே அறிக்கையிடுங்கள். இருமனமுயைவர் களாக வாழாமலும், பொல்லாத சிந்தைகளிலே தரித்திருக்காமலும், பூரணரா கும்படி கடந்து செல்வோமாக. தேவ ஆவியானவர்தாமே பெலப்படுத்தி நடத்திச் செல்வார்.

ஜெபம்:

உம்மிடத்தில் சேருகின்றவர்களுக்கு அதிக கிருபை அளிக்கின்ற தேவனே, என் வாயின் வார்த்தைகளும், இருதயத்தின் தியானங்களும், வெளியரங்மான கிரியைகளும் உமக்கு ஏற்புடையதாயிருப்பதாக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவேல் 2:12