தியானம் (பங்குனி 22, 2025)
அக்கிரம சிந்தைக்காரர் யார்?
சங்கீதம் 66:18
என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
அக்கிரம செய்கைகாரர் என்று கூறும் போது, நம் மனதிலே நம்மை குறித்து தோன்றும் எண்ணம் என்ன? நாங்கள் அப்படியாக ஒரு அக்கிர மமும் செய்வததில்லை அல்லது செய்வதில்லை என்று கூறிக் கொள் வார்கள். தாவீது ராஜாதாமே, பிறனுடைய தாரத்தை இச்சித்தாலும், தன் அதிகாரத்தை துஷ;பிரயோம் செய்து, தன் உடன் சகோதனை வஞ்சி த்தாலும், தான் அக்கிரமம் செய் தேன் என்று உணர்ந்து கொண்டான். வாழ் நாள் முழுவதும் உழைத்தா லும் கட்டி தீரமுடியாத கடனிலி ருந்து மன்னிப்பை பெற்றுக் கொண் டவன், தன் உடன் ஊழிக்காரனு டைய சிறிய கடனை மன்னிக்க முடி யாமல் அவனை ஒடுக்கியதால், பெரிய கடனிலிருந்து விடுதலையானவன் அக்கிரம சிந்தையுள்ளவ னானான். நீங்கள் தேவனை ஆராதிக்க கூடிவரும் போதும், அவரி டத்திலே விண்ணங்பங்களை ஏறெடுக்கும் போதும் நாம் அக்கிரம சிந் தையுடையவர்களாக இருக்கக்கூடாது. ஒரு விசுவாசியானவன், தான் பெற்றுக் கொண்ட பெரிதான மன்னிப்பை மறந்து போகும் போது, அவன் இருதயமானது கடினப்பட்டு போய்விடுகின்றது. பல முறை உணர்த்தப்பட்டும், அறிவுரைகளையும், ஆலோசனைகளையும், எச்சரிப்பு க்களையும் அசட்டை செய்கின்றவனின் மனசாட்சியில சூடுண்டவனாக மாறிவிடுகின்றான். நாம் அந்த நிலையை அடையாதபடிக்கு எச்சரிக்கை யுள்ளவர்களாக இருக்க வேண்டும். தாவீது ராஜா, தன் மாம்ச இச் சையை நிறைவேற்றி முடிக்கும்படிக்கு தன் உடன் சகோதரனை வஞ்சி த்தான். ஒரு விசுவாசியானவன மாம்ச சிந்தையாகிய பகைகள், விரோத ங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள் போன்றவற்றை நிறைவேற்ற தங்கள் இருதயத்திலே இடங் கொடுக்கும் போது, அவன் தன் உடன் சகோதர ர்களை எப்படி வஞ்சியாமல் இருக்க முடியும்? மாம்ச சிந்தை ஒருவனின் நிறைவேறும் போது, அங்கே ஆவியின் சிந்தைக்கு இடமில்லை. ஆனால் ஒருவன் ஆவிக்கேற்றபடி நடந்து கொண்டால், அவன் மாம்ச சிந்தைக்கு இடங்கொடாதிருப்பான். மாம்சம் ஆவிக்கு விரோதமாகவும், ஆவி மாம்சத்துக்கு விரோதமாகவும் இச்சிக்கிறது. எனவே, நீங்கள் அக்கிரம சிந்தையுள்ளவர்களா என்று உங்களை நீங்கள் ஆராய்ந்து அறிந்து கொள்ளுங்கள். இருதங்களை ஆராய்தறிகின்றவர் மனிதர்க ளுடைய சிந்தையிலுள்ளதை அறிந்திருக்கின்றார்.
ஜெபம்:
என் தேவனாகிய கர்த்தாவே, என்னை ஆராய்ந்து, என் இருதய த்தை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 139:23-24