புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 20, 2025)

ஆவியானவருக்கு இடங்கொடுங்கள்

கொலோசெயர் 3:1

நீங்கள் கிறிஸ்துவுடன்கூட எழுந்ததுண்டானால், கிறிஸ்து தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இடத்திலுள்ள மேலானவைகளைத் தேடுங்கள்.


தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபிக்காதவன், வீணனென்று சொல்லாதவன், மூடனே என்று அழைக்காதவன் யார் என்று கேட்டால், விசுவாசமார்க்கத்தாரில் எத்தனை பேர்க்கள், குற்றமற்றவர்ளாக இருப் பார்கள்? ஏறத்தாழ யாவரும் குற்றவாளிகளாக இருப்பார்கள் அல்லவா? ஆனால் நாம் நிர்மூலமாகாதப டிக்கு தேவ கிருபையானது நம்மை காத்துக் கொள்கின்றது. தேவன் நம்மேல் நீடிய பொறு மையுள்ளவராக இருக்கின்றார். அவருடைய குமாரனுடைய இர த்தம் நம் பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரிக்கின்றது. அவ ருடைய ஆவியானவர், நமக்கு ள்ளே வாசம் செய்து, நம் குற் றங்களை உணர்ந்து கொள்ளு ம்படி செய்து, விடுதலையடையும் போக்கை உண்டு பண்ணுகின்றார்;. இது யாவருக்கும் உண்டான பெரிதான சிலாக்கியம். தேவன் உண்டு பண்ணின விடுதலையின் வழியிலே நடப்பதற்கு ஒவ்வொரு விசுவா சியும் தன்னை ஒப்புக் கொடுக்க வேண்டும். ஒருவனும் பெலவீனன் என்று கூறாதபடிக்கு, பெலப்படுத்தும் தம்முடைய வல்லமையின் ஆவி யானவரை, பட்சபாதமின்று, தம்மை விசுவாசிகின்ற யாவருக்கும் கொடு திருக்கின்றார். மனிதர்களை கொன்று போடும் விஷம் நிறைந்த பாம்பா னது, ஒருவனை கொத்தும் போது, அவனுடைய இரத்தத் தொகுதிக் குள் அதன் விஷத்தை உட்செலுத்தி, அவனை கொன்று போடு கின்றது. அதுபோலவே, விசுவாசிகள் மனதிலே தங்கியிருக்கும் பகை, வன்மம், கசப்பு போன்ற பழைய மனுஷக்குரிய சர்பத்தின் சுபாவங்கள், விசுவாசி யின் ஆத்துமாவை கெடுத்து, ஜீவனற்றதாக்கிவிடும். எனவே, கொலை பாதகத்திற்குரிய சுபாவங்களை உண்டாக்கும், உங்கள் பழைய மனுஷ னுடைய அவயவங்களை உங்களை விட்டு அகற்றிவிடுங்கள். மன்னி ப்பை வழங்கும்படிக்கு உங்கள் இருதயம் இரக்கமற்றதாகமல், இரக்க முள்ளதாகவே இருக்கும்படிக்கு, மனக்கடினத்தை உண்டாகும், வன்வம், பகை, கசப்புக்கள் உள்ளே தங்க இடங்கொடாதிருங்கள். அப்படியான உணர்வுகள் தோன்றும், அந்த வேளைகளிலே, உங்கள் வாயின் வார்த் தைகளை குறைத்து, தேவனுடைய வார்த்தையை அறிக்கையிடுங்கள். ஜெபம் செய்யுங்கள். வேண்டுதல் செய்யுங்கள். உங்களுக்காகவும், உங்களை பகைக்கின்றவர்களுக்காகவும் ஜெபியுங்கள். அப்போது, தேவ சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேற நீங்கள் இடங் கொடுப்பீர்கள்.

ஜெபம்:

மன்னிக்கும் தேவனே. உம்முடைய குமாரனாகிய இயேசுவின் சாயலிலே நான் அனுதினமும் பெருகும்படிக்கு, உம்முடைய சித்தும் என்னில் நிறைவேற இடங்கொடுக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 5:20