தியானம் (பங்குனி 17, 2025)
நீதியைக் குறித்து உணர்த்துவார்
யோவான் 16:8
அவர் வந்து, பாவத்தைக் குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.
முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் நீதியையும் தேடுங்கள் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். தேவ நீதி என்பது என்ன? அதைப் எப்படி அறிந்து கொள்வது? அன்றைய நாட்களிலிருந்த பரி சேயர்களுக்கும், வேதபாரர்களுக்கும் ஒரு நீதி இருந்தது. அவர்கள் 'சும ப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விர லினாலும் அவைகளைத் தொடமாட்டா ர்கள்.' என்று ஆண்டவரரிய இயேசு தாமே அவர்களுடைய நீதியைப் பற்றி கூறியிருக்கின்றார். நாம் சுமக்க முடி யாத கடினமான கட்டளைகளை தேவ ன்தாமே நம்மிடத்தில் ஒருபோதும் திணிப்பதில்லை. ஒரு சமயம், ஆண்ட வராகிய இயேசுவின் போதனைகளை கேட்டுக்கொண்டிருந்த அவருடைய சீஷர்கள் அவருடைய போதனை யைக் கேட்டு, மிகவும் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்க ப்படக்கூடும் என்றார்கள். ஏனெனில், அவருடைய போதனைகள் எந்த மனிதர்களாலும்; கைகொள்ள முடியாதபடிக்கு மிகவும் கடினமாக தோன் றிற்று. இயேசு, அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனாலே எல்லாம் கூடும் என்றார். அதாவது, உங்கள் பெலத்தினால் தேவ காரியங்களை நிறைவேற்ற முடியாது. ஆனால், நீங்கள் தேவ னுக்கு உங்கள் இருதயங்கிலே இடங்கொடுத்தால், ஒரு மனிதனால் ஆகாததை அவன் செய்து முடிப்பதற்கு அவர் வழிநடத்திச் செல்வார். நம் வாழ்வில் வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், தேவ நீதி என்ன என்பதை அவர் தம்மை தங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்கின்றவர் களுக்கு உணர்த்துவார். உணர்த்துவதோடு விட்டுவிடாமல், அவர் அதை செய்து முடிக்க வேண்டும் என்று வாஞ்சிக்கின்றவர்களுக்கு, அதை செய்து முடிப்பதற்குரிய பெலத்தை, தகுந்த வேளையிலே அருளிச் செய்கின்றார். 'அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.' அது மட்டுமல்ல, 'சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்திய த்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசா மல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போ கிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.' (யோவான் 16:13). னவே நம் முடைய வாழ்வில் நாம் எதிர்நோக்கும் ஒவ்வொரு சூழ்நிலைகளிலும், தேவ ஆவியானவர்தாமே நம்மோடிருந்து தேவ நீதியை இன்னதெ ன்பதை கற்றுக் கொடுகின்றராயிருக்கின்றார்.
ஜெபம்:
கற்றுத் தந்து நடத்துகின்ற தேவனே, உம்மை விசுவாசத்து, உம்முடைய வார்த்தைகள் என்னில் நிறைவேற இடங்ககொடுக்கும் உணர்வுள்ள இருதயத்தை தந்து என்னை உம் வழியில் நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 32:8-9