புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 16, 2025)

கேட்டு, கீழ்படிந்து, போதியுங்கள்

யாக்கோபு 1:22

திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.


தேவனாகிய கர்த்தர்தாமே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கின்றார். மோசே என்னும் மனுஷன், உம்முடைய நாமம் என்ன வென்று தேவனாகிய கர்த்தரிடத்திலே கேட்டபோது, அதற்கு அவர்: நான் இருக்கின்றவராய் இருக்கின்றேன் என்று மறுமொழி கூறினார். அவருடை தெய்வீக தன்மைகள் மாறாதவைகள். இந்த பூமியிலே, மனித குலமானது உருவாக்கப் பட்ட நாள் முதல், அவர்களுக்கு சுயாதீனத்தை கொடுத்து, அவர் கள் எப்போதும் தம்மை மனதார சேவிக்க வேண்டும் என்பதே அவருக்கு பிரியமாயிருக்கின்றது. நான் கூறிய வார்த்தைகளை 'நீ உன் பிள்ளைகளுக்குக் கருத்தாய்ப் போதித்து, நீ உன் வீட்டில் உட் கார்ந்திருக்கிறபோதும், வழியில் நடக்கிறபோதும், படுத்துக்கொள்ளுகிற போதும், எழுந்திருக்கிறபோதும் அவைகளைக் குறித்துப் பேசி, அவைகளை உன் கையின்மேல் அடை யாளமாகக் கட்டிக்கொள்வாயாக. அவைகள் உன் கண்களுக்கு நடுவே ஞாபகக்குறியாய் இருக்கக்கடவது. அவைகளை உன் வீட்டு நிலைக ளிலும், உன் வாசல்களிலும் எழுதுவாயாக.' என்னு தீர்க்கதரிசியாகிய மோசே வழியாக தம்முடைய ஜனங்களுக்கு கூறினார். போதிக்கதும், பேசுவதும், அடையாள சின்னமாக கட்டிக்கொள்வதும், ஞாபகக்குறியாக வைத்திருப்பதும், நிலைகளிலே, வாசல்களிலே எழுதிக் கொள்வதையும் பொதுவாக யாவரும் செய்ய ஆதயத்தமுள்ளவர்களாக இருக்கின்றார் கள். ஆனால், இவைகளை கூறு வதற்கு முன்னதாக, 'நீ உன் தேவ னாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்து மாவோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக. இன்று நான் உனக்குக் கட்டளையிடுகிற இந்த வார்த்தைகள் உன் இருதயத்தில் இருக்கக்கடவது.' என்று எழுதப்பட்டிருக்கின்றது. இருதயத்தில் வைத்து காத்துக் கொள்ளவதே தேவ ஜனங்களுக்கு கடினமாக இருந்தது. இன் றைய நாட்களிலும், முதலாவதாக நாம், தேவனுடைய வார்த்தை களை கேட்கின்றவர்களாக இருக்காமல், அவற்றை கைகொள்கின்றவர்களாக இருக்க வேண்டும் என்ற உணர்வு இருதயத்திலே இருக்க வேண்டும். கர்த்தருடைய வார்த்தைகள் எப்போதும் நம்முடைய சிந்தையிலே தியா னமாக இருக்க வேண்டும். அவைகளை அயலவனுக்கு போதிப்பதற்கு முன்னதாக, வீட்டிலே கருத் தாய் போதிக்கப்பட வேண் டும். இவை களை நம்மில் நடப்பிப்பதற்கு சத்திய ஆவியானவர்தமே எப்போதும் நம்மோடு இருக்கின்றார்.

ஜெபம்:

நேற்றும் இன்றும் என்றும் மாறாத தேவனே, உம்முடைய வார்த்தைகள் என்றும் மாறாதவைகள். நீர் கூறிய வார்த்தைகளை நான் கேட்டு, அதன்படி செய்வதற்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபா 4:24-27