புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 14, 2025)

கிரியைகளுக்கு தக்க பலன் உண்டு

ரோமர் 2:6

தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார்.


பிலதெல்பியா என்னும் சபையை குறித்து ஆண்டவராகிய இயேசு கூறும்போது, உன் கிரியைகளை அறிந்திருக்கின்றேன், உனக்குக் கொஞ்சம் பெலன் இருந்தும், நீ என் நாமத்தை மறுதலியாமதல், என் வசனத்தை கைகொண்டபடியினாலே, இதோ, திறந்த வாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கின்றேன். அதை ஒருவனும் பூட்டமாட்டான். என் பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண்டபடியினால், பூமியில் குடியிருக்கிறவர்களைச் சோதிக்கும்படியாகப் பூச்சக்கரத்தின்மேலெங்கும் வரப்போகிய சோதனைக் கால த்திற்குத் தப்பும்படி நானும் உன்னைக் காப்பேன். இதோ, சீக்கிரமாய் வருகிறேன்: ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு என்றும், இதில் ஜெயங் கொள்கின்றவர்கள் அடை யப் போகும் பெரிதான பலனைக் குறித்து கூறியிருக்கின்றார். மேலே குறிப்பிட்பட்ட தூதிலே, 'என் வசனத்தை கைகொண்டபடியினாலே', என் 'பொறுமையைக் குறித்துச் சொல்லிய வசனத்தை நீ காத்துக் கொண் டபடியினால்' 'ஒருவனும் உன் கிரீடத்தை எடுத்துக் கொள்ளாதபடிக்கு உனக்குள்ளதைப் பற்றிக் கொண்டிரு' என்ற வார்த்தைகளைப் பாருங்கள். கொஞ்சப் பெலன் இருந்தும் அவர்கள் தேவனுடைய கட்டளைகளை கைக்கொண்டார்கள். அவர்களுக்கு கொஞ்பெலனிந்தும் உனக்குள்ளதை பற்றிக் கொண்டிரு என்று உற்சாகப்படுத்தினார். மேலும், இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடு கூட வருகிறது என்றும், அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாகயிருக்கின்றவன் இன்னும் அசுதமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும் என்றும் கூறியிருக்கின்றார். அநியாயம் எது, அசுத்தம் எது, நீதி எது, பரிசுத்தம் எது? இவைகளை தேவனுடைய வசனத்திலுள்ள கட்டளைகளே வகையறுத்துக் கூறுகின்றது. எனவே, ஒருவன் தேவ கட்டளைகளை பற்றி கூறும் போது, அது பழையது, இது புதியது என்று தர்க்கித்துக் கொண்டால், அவனோடு சேர்ந்து நீங்களும் உங்கள் காலத்தை விரயப்படுத்தாமல், வேத வார்த்தைகளின் கருப்பொருளை அறிந்தவர்களாக, கர்த்தருடைய வேதத்தை மனமகிழ்ச்சியாகவும் அவருடைய கற்பனை களை மறந்து போகாமலும் இருங்கள். பரலோகத்தின் கைமாறு உங்களுக்கு மிகுதியாயிருக்கும்.

ஜெபம்:

கிருபையை பொழிகின்ற தேவனே, உம்முடைய கற்பனைகளை குறித்து தர்க்கித்துக் கொள்னாமல் அவைகளை கைகொண்டு போதிக்கவும், பரலோக பலனை மிகுதியாக அடைந்து கொள்ளவும் எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 11:13-14