தியானம் (பங்குனி 13, 2025)
பெலவீனங்களை மேற்கொள்ளுங்கள்
அப்போஸ்தலர் 6:8
ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.
ஆதி அப்போஸ்தல சபையிலே, ஸ்தேவான் என்னும் விசுவாசியாவன், பந்தி விசாரிப்பின் உதவி ஊழியத்திற்காக வேறு பிரிக்கப்பட்டான். அவன் ஊராக தேவன்தாமே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் நடத்தினார். அந்நாட்களிலிருந்து யூத மததத்தை சார்ந்தவர்கள், அவனுக்கு எதிராக எழுப்பி, அவன் மேல் பொய்சாட்சியை பிணைத்து, ஆலோசனைச் சங்கத்திற்கு முன்னபாக நிறுதி, அவனை கல்லெறிந்தார்கள். அவனோ முழங்காற்படியிட்டு, ஆண்டவரே, இவர்கள்மேல் இந்தப் பாவத்தைச் சுமத்தாதிரும் என்று மிகுந்த சத்தமிட்டுச் சொல்லி கர்த்தருக்குள் நித்திரையடைந்தான். மரண வேதனையில் அவஸ்தைப்படும் தறுவாயில், எப்படியாக அவனுக்கு தன்னை துன்புறுத்துகின்றவர்காக உண்மையாக ஜெபம் செய்ய முடிந்தது? ஆண்டவர் இயேசுவின் சுவிசேஷத் திற்காக தன் உயிரை ஒப்புக் கொடுக்கும்படிக்கு பெலன் எங்கே இருந்து வந்தது? ஆலோசனைச் சங்கத்தின் முன் நிற்கும் போது, பழைய ஏற்பாடிலிருந்து, தேவ காரியங்களை அழகாகவும் நேர்த்தியாகவும் தொகுத்து, தேவனுடைய அநாதி தீர்மானத்தைக் குறித்து மிகவும் தெளிவாகவும் ஆணித்தரமாகும் பேசுவதற்கு அவனுக்கு எங்கிருந்து ஞானமும், வல்லமையும் உண்டானது? பரிசுத்த ஆவியானவர்தாமே அவனுக்கு ஞானத்தையும் வல்லமையும் அருளிச் செய்தார். கிருபையினால் உண்டான விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருந்தான். பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை தன் வாழ்விலே செய்து முடிக்க அவனுக்கு வேண்டிய பெலத்தை தேவனாகிய கர்த்தர்தாமே தகுந்து வேளையிலே அவனுக்கு கொடுத்தார். அது தேவனுடைய கிருபை. பிரியமானவர்களே, இன்று உங்களுக்கு இருக்கும் பெலவீனம் என்ன? பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை உங்கள் வாழ்விலே நிறைவேற்றி முடிக்கும்படிக்கு உங்களை தடை செய்யும் பெலவீனம் என்ன? அதைக் குறித்து நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, நியாயப்பிரமாணம், கிருபை என்று உங்கள் கொள்கை கோட்பாடுகளிலே தரித்து நிற்கின்றீர்களா? ஸ்தேவானுக்கு அருளப்பட்ட அதே ஆவியானவர் உங்களோடு இருக்கின்றார். நீங்கள் செய்ய வேண்டியவைகiளா செய்துமுடிக்கு ம்படிக்கு வேண்டிய கிருபை தேவனாகிய கர்த்தர்தாமே அனுதினமும் பொழிகின்றார். எனவே, பெலவீனத்திலே நிலைத்திருக்க சாட்டுபோக்குச் சொல்லாமல், தேவ சித்தத்தை உங்கள் வாழ்விலே நிறைவேற்றுங்கள்.
ஜெபம்:
அன்பின் பரலோக தந்தையே, என் பெலவீனங்களை நியாயப்படுத்தி கொள்கை கோட்பாடுகளை கூறாமல், உம்முடைய சித்தத்தை என் வாழ்விலே நிறைவேற்றி முடிக்க எனக்கு உணர்வுள்ள இருதத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 136:1-3