தியானம் (பங்குனி 12, 2025)
விசுவாசிகளாயிருங்கள்!
யோவான் 11:40
நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்
ஒரு கிராமத்திலே வசித்த வந்த மனிதனொருவன், தன் பின் வளவிலே காய்கறி தோட்டத்தை வைதத்திருந்தான். அவ்வவ்போது, அயலிலேயுள்ளவர்களின் ஆடுமாடுகள் சென்று காய்கறி கன்றுகளை மேய்ந்துவிடுவதால் அவன் மிகவும் கோபம் கொண்டான். கிராமத்தின் மூப்பர்களின் சங்கத்திலே, தன் வழக்கை விளக்கி கூறி, அயலவர்களின் கவனயீ னத்தால் தனக்குண்டாகும் நஷ்ட த்தை எடுத்துக் கூறினான். அப்பொழுது, கிராமத்தின் மூப்பர்களில் ஒருவர், அவனை நோக்கி: கிராமத்திலுள்ள யாருடைய ஆடுமாடுகள் உன் வளவிற்குள் வந்து மேய்ந்து கொண்டு போகின்றது என்பது கண்டறிவது கடினம். நீ ஏன் வளவை சுற்றி போட்டிருக்கும் வேலியை பெலப்படுத்தி, அதிலுள்ள திறப்புக்களை அடைத்துவிடக் கூடாது என்று கேட்டார். ஆனால், அந்த நல்ல ஆலோசனையை கேட்கதற்கு அவனுக்கு மனதில்லை. தன் வீட்டின் வளவை திறந்து வைத்து விட்டு, மற்றவர்களை குற்றம் சாட்டுவதிலேயே அவன் தன் காலத்தை கழித்து வந்தான். அருமையான விசுவாசத்தை பெற்ற விசுவாசிகளே, ஒரு விசுவாசியானவன், எதிலே விசுவாசமாக இருக்க வேண்டும்? அவன் தேவனுடைய வார்த்தைக ளிலே நம்பி அதன்படி செயற்படுகின்றவனாக இருக்க வேண்டும் அல்லவோ! ஆம், அவன் ஆண்டவராகிய இயேசு சொல்லிய வார்த்தை களைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறான். அவைகளை செய்து முடிப்பதற்காக, தேவன்தாமே காலைதோறும் புதிய கிருபையை பொழிகின்றார். சில வேளைகளிலே அவன் தவறி விழும் போது, தன் மீறுதல்களை மறைத்து வைக்காமல், அதை தேவ வார்த்தையின்படி அறிக்கையிட்டு, தேவ வார்த்தையின்படி மனந்திரும்பி, தேவ வார்த்தை யின்படியே மன்னிப்பை பெற்றுக் கொள்கின்றான். 'வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை.' (லூக்கா 21:33) என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். எனவே, நீங்கள் ஆண்டவராகிய இயேசுவிலும், அவருடைய வார்த் தைகள் உங்களிலும் நிலைத்திருக்கட்டும். தேவனுடைய நீடிய பொறுமையை அசட்டை பண்ணாமல், அவருடைய வார்த்தையை விசுவாசி த்தால், அதன்படி உங்கள் வாழ்க்கை அமைத்துக் கொள்ளுங்கள். ஆவிக்குரிய போராட்டத்தை போராடி, விசுவாசத்தைக் காத்துக் கொள்ளும்படிக்கு, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தை அணிந்து கொள்ளுங்கள். நம்மை பெலப்படுத்துகின்ற தேவ கிருபை என்றுமுள்ளது.
ஜெபம்:
நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, என் கண்களால் இன்னும் காணப்படாதவைகள் நிச்சயமாக நடக்கும் என்ற விசுவாசத்தோடு, உம்முடைய வார்த்தையில் உறுதியாய் நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்
மாலைத் தியானம் - மத்தேயு 5:18