புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 11, 2025)

விசுவாச வாழ்க்கை (பகுதி 2)

1 யோவான் 5:4

நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.


ஒரு ஊரிலே ஊதாரித்தனமாக வாழ்ந்து வந்த மனிதனொருவன், அவ னுடைய பாவங்கள் நிறைந்த வாழ்க்கை முறைமையினாலே பலராலும் ஒதுக்கப்பட்டிருந்தான். தேவ கிருபையானது அவன் வாழ்விலே வெளிப் பட்ட போது, அவன் ஆண்டவராகிய இயேசுவின் தூய இரத்தத்தி னாலே கழுவப்பட்டு, இரட்சிப்பையடைந்தான். தன் குடும்பமானது கட்டியெழுப்பபட வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்ட அவன், தன்னுடைய வேலைக்காக, பொருளாதார எழுச்சிக்காக, சொந்தமான வீடு வாங்குவதற் காக, பிள்ளைகளின் படிப்பு க்காக விசுவாசத்திலே உறுதி யாக நிலைத்திருந்து, தேவன் அவைகளை செய்து முடிப்பார் என்று அறிக்கை செய் தான். அவை யாவற்றிற்காகவும் ஊக்கமாக ஜெபம் செய்தான். சில வேளைகளிலே உபவாசித்து ஜெபித்து, அவைகளை பெற்றுக் கொண்டான். சபை நடுவே ஆகாததும், தனக்கு எட்டாததுமான காரியங்களை தேவன் வாய் க்கப்ப பண்ணினார் என்று சாட்சிகளை கூறி வந்தான். சில ஆண்டுகள் சென்ற பின்னர், அநேக பாவங்களிலும் களியாட்டுக்களிலும் இருந்து விடுதலைபெற்ற அவன், பொய் கூறுவதையும், நண்பர்களோடு அவ்வ ப்போது களியாட்டங்களிலே ஈடுபடுவதையும் முற்றாக விட்டு விடாமல் இருந்தான். அவைகளை குறித்து யாராவது அவனுக்கு சுட்டிக் காட்டி னால், நான் பெலவீனன், தேவ கிருபை என்னை காத்துக் கொள் ளும் என்று கூறிக் கொள்வான். ஒரு சமயம் மேய்ப்பரானவர் அவனை கண் டித்த போது, அவன் மேய்பரானவரை நோக்கி: நீங்கள் நியாயப் பிர மாண ஊழியன் என்று கூறினான். புpரியமானவர்களே, அவன் எதெற் கெல்லாம் தேவனை விசுவசித்து அவைகளை பெற்றுக் கொண்டான் என்பதை ஆராய்ந்து பாருங்கள். தன் பழைய பழக்கமாகிய பொய் பேசுதல், களியாட்டங்களிலே ஈடுபட்டு தகாதவைகளை நடப்பித்தல் என்வற்றிலிருந்து தேவன் தன்னை விடுதலையாக்க வேண்டும் என்று அவன் ஊக்கமாக ஜெபிப்பதில்லை. அவற்றை தேவன் நொடிப்பொ ழுதில் மாற்றிப் போடுவார் என்று விசுவாசிக்க விருப்பமில்லை. ஏன்? ஆவன் அப்படி ஜெபித்தால், தன் பழைய நண்பர்களைவிட்டு விலக வேண்டும். வேண்டாத உறவுகளை விட்டுவிட வேண்டும். அதனால் அவன் கிருபையே காரியம் என்று கூறி கிருபையின் நாட்களை விருதாவாக்கி வந்தான். நீங்களோ, அப்படியிராமல், விசுவாசத்த்தி னாலே பெலவீனங்களை மேற்கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக தந்தையே, அழிந்து போகின்ற உலக ஆசீர்வாதங்களுக்கு விசுவாசியாயும், அழியாத ஆவிக்குரிய காரியங்களுக்குக அவிசுவாசியுமாக இராதபடிக்கு, விசுவாசத்தினாலே உலகத்தை ஜெயிக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:15-16