புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 10, 2025)

விசுவாசத்தின் ஆரம்பமும் முடிவும்...

கலாத்தியர் 3:5

அன்றியும் உங்களுக்கு ஆவியை அளித்து, உங்களுக்குள்ளே அற்புதங்களை நடப்பிக்கிறவர் அதை நியாயப் பிரமாணத்தின் கிரியைகளினாலேயோ, விசுவாசக் கேள்வியினாலேயோ, எதினாலே செய்கிறார்?


இரட்சிப்பானது கிருபையினாலே விசுவாசத்தைக் கொண்டு உண்டானது. நாம் சட்டதிட்டங்களை கைகொள்வதினாலோ, நற்கிரியைகளை செய்வ தினாலோ அது உண்டாகவில்லை. இரட்சிப்பானது தேவனுடைய ஈவு. இப்போது, இரட்சிப்பதை பெற்றுக்கொண்ட விசுவாசியாவன், தன் அனு தின விசுவாவ வாழ்க்கையை எப்படி வாழ்வது? எப்படி நல்ல போரா ட்டத்தை போராடி விசுவாசத்தை காத்துக் கொள்வது. சுயபெலத்தினால் அதை நிறைவேற்றக் கூடுமோ? நற் கிரியைகளினாலே விசுவாசத்தை காத்துக் கொள்ளக்கூடுமோ? ஒரு வன் ஆவியிலே தொடங்கி மாம்ச த்திலே தேவ சித்தத்தை நிறைவே ற்ற கூடுமோ? நல்ல போராட்டம் போராடுவதற்கு நம்முடைய போரா யுதங்கள் மாம்ச பெலன் அல்ல. 'எங்களுடைய போராயுதங்கள் மாம் சத்துக்கேற்றவைகளாயிராமல், அர ண்களை நிர்மூலமாக்குகிற தற்கு தேவபலமுள்ளவைகளாயி ருக்கி றது.' (2 கொரி 10:4). என்னையல் லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாதது என்றும், இந்த உலகம் போகின்ற போக்கிலே, அவர் திரும்பி வரும்போது, பூமியிலே விசுவா சத்தை அவர் காண்பாரோ என்றும் ஆண்டவராகிய இயேசு கூறியிரு க்கின்றார். எனவே, 'விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமா யிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்'; (எபி 12:1). ஆண்டவர் இயேசு இல் லாமல், விசுவாசம் ஆரம்பிப்ப தில்லை, அவரில்லாமல் விசுவாச வாழ் க்கை வாழ முடியாது, அவரில் லாமல் விசுவாச வாழ்க்கையை வெற்றி கரமாக முடிக்க முடியாது. நம்முடைய நற்கிரியைகள் யாவும் கிறிஸ்து இயேசுவுக்குள் நடப்பிக்கப்படும்படி நாம் அவருக்குள் ஆயத்தம் பண் ணப்பட்டிருக்கின்றோம். தேவனே நமக்குள் செய்கையையும் விரும்பத் தையும் உண்டு பண்ணுகின்றார். அபாத்ரராக இருந்த நம்மை, தம்மு டைய தூய இரத்த்தினாலே கழுவி, நீதிமான்களாகப்பட்டு, நம் வழியாக இயற்கைக்குள்ளாள நற்கிரியைகளையும், இயற்கைக்கு அப்பாற்பட்ட அற்புதங்களையும் நடப்பித்து வருகின்றார். அவைகளை நடப் பிக்கின்ற வரை மறந்து, நம் வழியாக நடத்தப்படும் நற்கிரிகைகளி னாலே, தேவ னுக்கு முன்பாக நாம் இரட்சிப்புக்கு பாத்திரராகின்றோம் என்ற எண்ணம் நமக்குள் உருவாகதபடிக்கு எச்சரிக்கையுள்ளவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

இரட்சிப்பபை ஈவாக தந்த தேவனே, ஆவியினாலே ஆரம்பம்பண்ணின நான் காலங்கள் கடந்து சென்ற பின்னர், புத்தியீனனாகி, மாம்சத்தினாலே முடிவுபெறாதபடிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1