புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 09, 2025)

விசுவாச வாழ்க்கை

எபிரெயர் 10:38

பிழைப்பான், பின்வாங்கிப் போவானானால் அவன்மேல் என் ஆத்துமா பிரியமாயிராது என்கிறார்.


நியாயப்பிரணமாத்தின் காலத்திலும், அதற்கு முன்னிருந்த நாட்களிலும், கிருபையின் காலத்திலும், சடங்காச்சாரமாக தேவனை சேவிப்பது, தேவ னுக்கு பிரியமில்லாத காரியமாகும். மனிதனோ முகத்தைப் பார்த்து முகஸ்தூதி செய்கின்றான். ஆனால், தேவனோ இருதயங்களை ஆராய் ந்தறிகின்றார். முற்காலத்திலே காயீனும் ஆபேலும் தேவனாகிய கர்த்த ருக்கு பலி செலுத்தினார்கள். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார். காயீனை யும் அவன் காணிக்கையையும் அவர் அங்கிகரிக்கவில்லை. ஏன் கர்த்தர் ஆபேலுடைய காணிக் கையை அங்கிகரித்தார்? 'விசு வாசத்தினாலே ஆபேல் காயீனு டைய பலியிலும் மேன்மையான பலியை தேவனுக்குச் செலுத்தி னான்; அதினாலே அவன் நீதிம hனென்று சாட்சிபெற்றான்;.' (எபி ரெயர் 11:4). விசுவாசமில்லாத எந்தக் கிரியைகளினாலும் வரும் பலன் அற்பமே. அதாவது, கட்டளைகளை கைகொள்ளுதல், ஸ்தோத்திர பலி களை செலுத்துதல், உபவாசித்தல், ஜெபித்தல், தானதர்மங் களை செய் தல் போன்றவைகளை விசுவாசமில்லாமல் ஏறெடுக்கப்படும் போது அவை தேவனுக்கு முன்பாக பிரியமாக இருக்காது. விசுவாச மென்பது, மெய்யான ஒரு தேவன் என்று ஒருவர் இருக்கின்றார் என்று நம்புவ துடன் முடிவடைந்து போவதில்லை. மாறாக, அது அதிலே ஆரம்பமா கின்றது. மனிதர்களுடைய எந்தக் நற்கிரியைகளினாலும் ஈடு செய்ய முடியாத மனித சுபாவத்தின் உள்ளார்ந்த சீர்கேட்டைப பற்றிய, உணர் வுள்ள இருதயம். மீட்பராகிய இயேசு கிறிஸ்து இல்லாமல், ஏதும் செய்ய முடியாத என்பதை ஏற்றுக் கொள்ளும் உள்ளம். மீறுதல்களு க்காக துயரப்பட்டு, அவற்றை அறிக்கை செய்து விட்டு விடுகின்ற இரு தயம்;. தேவ திட்டத்தின்படி அவருடைய சித்ததை நிறைவேற்றும் அவரு டைய வேளைக்காக காத்திருக்கும் இருதயம. தனிப்பட்ட வாழ்வி லும், இந்தப் பூமியிலும் தேவ நீதி நிறைவேற வேண்டும் என்கின்ற வாஞ் சையும், மன்னித்து மறந்து விடுகின்ற இரக்கமுள்ள இருதயம்;, மாசி ல்லாத தேவ உறவை பேணிப் பாதுகாப்பதும், பரலோகத்தோடு பெற்ற சமாதானத்தை, மற்றவர்களுக்கு அறிவிக்கின்ற வாழ்க்கையும், தேவ சித்தம் சொந்த வாழ்விலே நிறைவேறும்படி, கிறிஸ்துவுக்காக துன்பங் களை, சந்தோஷத்துடன் சகித்துக் கொள்ளும் இருதயமமும் உண்மை யான விசுவாசதின் தன்மைகளாகும்.

ஜெபம்:

என் அழைத்த தேவனே, உணர்வற்ற இருதயத்துடன், கடமை க்காக உம்மை சேவிக்காமல், மனநிறைவுடன் உம்மிலே நிலைத்திருக்கும் வாழ்க்கை வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 2:16